பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 89 ஊரவிட்டு ஒடியா போறேன்? ஒங்களுக்கெல்லாம் ராஜ லிங்கம்தான் லாயக்கு. கசக்கிப் பிழிஞ்சி எடுத்திருப்பான். ஏதோ ஒரே குடும்பமா இருந்து தொலைச்சிட்டமேன்னு, முப்பதாயிரம் ரூபாய் ஏலத்துல எடுத்திருக்கேன். அவசரத்துக்கு உங்க பணத்தை கொடுத்திட்டேன் ஒரு வாரம் பொறுக்கப்படாதா? நியாயமாப் பாத்தால், இந்த மாசம் ஒங்களுக்கு சம்பளமே கொடுக்கப்படாது. ஏன்னா, என்னோட சேர்த்து, நீங்களும் ராஜலிங்கத்துகிட்ட சிக்காம இருக்கதுக்கு முப்பதாயிரம் ரூபாய் செலவளிச் சிருக்கேன். இந்தக் காலத்துல நல்லது செய்தாக்கூட கெட்டதாத்தான் முடியுது. சரி ஒரு வாரம் பொறுத்துக் கங்க. சீனிவாசன் ஸார், என் பசங்களுக்கு ஸ்பெஷல் கோச்சிங் கொடுத்திட்டுப் போங்க.' தங்கப்பாண்டி போய்விட்டார். இந்திரா இருந்ததால் எதுவும் பேச முடியாமல் அங்கே இருந்த ஆசிரியா கள் அத்தனை பேரும் விக்கித்து நின்றார்கள். இறுதியில் ஒவ்வொருவராக நகர்வது தெரியாமலே நகர்ந்தார்கள். சீனிவாசன் மட்டும், அடைபட்டுக் கிடந்த நான் காவது வகுப்பு மாணவர்களிடம் வந்தார். 'வீட்டுக்கு எந்த முகத்தோடு போவது? உண்பதற்கே நெல் இல்லை, விற்பதற்கு ஏது? மருமகப் பிள்ளையோ கறார் பேர் வழி. நாளைக்கு எப்படியும் மகளை அனுப்பியாக வேண்டும். சென்னைக்கு டிக்கட் முப்பது ரூபாய். கூடப் போகும் மனைவிக்கு முப்பது. அவள் திரும்பி வர முப்பது. செலவுக்கு ஐம்பது. பேரனுக்கு கால் பவுன் மோதிரம் போட இருநூறு மொத்தம்...' சீனிவாசன் சுக்கு நூறாக உடைந்து போய், வீட்டை விட, வகுப்பறையே தேவலை என்பதுபோல் பையன் களிடம் போனார். இந்தப் பிள்ளைகளுக்கு அபிஷியல்’ ஆசிரியர் தங்கப்பாண்டி. அவர் வகுப்புக்கு வநததே கிடையாது. ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு வாரம் முழுவதும் சாயங்காலம் குறைந்தது ஒரு மணி நேரமாவது இவர்