பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. சு. சமுத்திரம் சரஸ்வதி பால் பவுடர் டின்னை வைத்து, தண்ணிர் மொண்டு கொண்டிருந்தாள். மானேஜர் வீட்டு மாட்டுத் தொட்டியில் இதுவரை பத்துக் குடங்களை ஊற்றியாகி விட்டது. இன்னும் பத்துக் குடங்கள் ஊற்றியாக வேண்டும். மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும், வீட்டுக்குப் போய் தலையைக் காட்டிவிட்டு, மானேஜர் வீட்டிற்குப் போய் குடங்களை எடுத்துக்கொண்டு வந்து விட்டாள். பள்ளிக்கூடத்தில் கத்திக் கத்தி தொண்டை வலித்தது. இப்போது அந்த வலியை, வளைந்து வளைந்து நிமிர்ந்ததால் ஏற்பட்ட முதுகுவலி விழுங்கியது. அருகே இருந்த பெண்ணிடம் முதுகுவலி தீரும்வரை பேசுவது என்று, எதையோ அவள் பேசிக் கொண்டிருந்தபோது, கீழத் தெரு சுப்பையா வீட்டில் நடந்த சடங்குக்குப்’ போய்க் கொண்டிருந்த மானேஜரின் மனைவி ராசம்மா, 'ஏய் சரசு சீக்கிரமா வேலய முடியேண்டி. எவ்வளவு நேரமா தண்ணி எடுக்கப்போறே கொஞ்சம்கூட இது இல்லையே' என்று நின்று நிதானமாகச் சொல்லிவிட்டு நடந்தாள். பிறகு திரும்பி நடந்து வந்து "ஏய் மங்காத்தா! ஒன்னு கடனை அடைக்கனும், இல்லன்னா வட்டி கட்டணும். ரெண்டும் பண்ணாட்டா எப்டி? சோறுதான திங்ற?' என்று சொல்லிவிட்டுப் போனாள். மங்காத்தா திரும்பிப்போன ராசம்மாவின் முதுகைக் குத்துவதுபோல் கையை ஓங்கிக் கொண்டாள். சரஸ்வதிக்கு என்னவோ போலிருந்தது. பெற்ற தாய் கூட நான்குபேர் முன்னிலையில் இப்படிப் பேசமாட்டாள். பக்கத்தில் நின்ற ஒரு பெண், அவளை உசுப்பினாள். எல்லாப் பெண்களும், சரஸ்வதியை ஒட்டுமொத்தமாகப் பார்த்தார்கள். மங்காத்தாவை, ராசம்மா இப்படிக் கேட்பது வழக்கம். அவள் இப்போது 'அசிங்கமாக'த் திட்டினாள். கேட்பவர்களையும் திட்டுவாள். ஆகையால் அவளை விட்டுவிட்டு, சரஸ்வதியைச் சாடினார்கள்!