பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய தெய்வம் 13 அரங்கில் வந்தவர் மிடுக்காய் தனது கடுக்கன் ஜொலிக்க 'கயிறு தேடுறான்! . இப்போ கயிறு தேடுறான்! யாரு? வயிறு பெருத்தப் பிள்ளையாரை வாட்ட மின்றிப் பெத்தவன்!- கழுத்தில் மாட்டிச் சாக மொத்தமாய் ? ஒரு கயிறு தேடுறான்! கயிறு தேடுறான்: என்றே பாடி ஆடி அழுதார்! சென்ற இடமெலாம் கவிதையாய் அழுவது வாடிக்கை யான வேடிக்கை அவருக்கு! பீடிகை போட்டே பண்டித வித்வான், பவனந்தி முனிவரின் பாட்டன் போன்றவர் அவர்வந் துற்றார் ஆலாப னையுடன்: "வென்றிதெழ அயிலோன்றன் அருட்டி றத்தை விதந்து நனி நெக்குருக போற்றல் செய்வோம்!”