பக்கம்:புதிய பார்வை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ 06 புதிய பார்வை

பாடன் கதை, பாரதக் கதையின் சில பகுதிகள் ஆகிய இவற்றை விரிவாகக் கூறிவிட்டுப் பத்தாவது கங்தத்தில் தான் கண்ணபிரானின் அவதாரத்தையும் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் கூறுகிருர், பத்தாவது கங்தத்தில் பரீட்சித்து மன்னரை நோக்கிச் சுகமுனிவர் கூறுவதாகக் கண்ண னுடைய கதைகளைச் சூத முனிவர் தொடங்குகிரு.ர். இதிகாச காவியங்கள் மூன்றினுள் ஒன்ருக இந்தப் பாகவதத்தின் சிறப்பு என்னவென்ருல் இக்காவியம் முழுவதும் ஒருவருக் கொருவர் விவரித்துக் கூறும் முறையிலேயே நெடுகிலும் அமைப்புப் பெற்றுள்ளது. முதற் பத்துக் கங்தங்களில் வந்துள்ள கதை நிகழ்ச்சிகளே ஏற்கெனவே பாரதம், இரா மாயணம் ஆகிய பிற காவியங்களில் அறிந்துகொண்டிருப்ப தாலும் சுவை கெடவில்லே.

'எனக்குப் பசி ஏற்படாது தாகம் ஏற்படாது: சோர்வு, துயரம், அல்லல், அவலம் எதுவுமே ஏற்படாது: பரமாத்மாவான கண்ணனின் கதைகளே இன்னும் எனக்குச் சொல்லிக் கொண்டே இருங்கள். நான் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். என் மனத்தில் அவை சாங்தியை உண் டாக்குகின்றன" என்று வியாசரின் புதல்வரான சுகமுனிவ. ரிடம் கண்ணனின் பெருமைகளைக் கேட்கும்போது பரீட்சித்து மன்னன் கூறினனம். பாகவதக் கதைகளைக் கேட் கும்போது அவனுடைய மனத்தில் எவ்வளவு சுவையுணர்ச்சி ஏற்பட்டிருந்தால் அவன் இப்படிக் கூறியிருக்க வேண்டும்?

எங்த உயர்ந்த பொருளேயும் சுவைக்கவோ, அனுபவிக் கவோ எண்ணில்ை அங்தப் பொருளின் மேல் பயபக்தி வேண்டும். இரசிகத்தன்மையின் இலக்கணமே இதுதான். காலினல் மிதித்துக் கொண்டு மேலே ஏறிச்செல்லும் வாசற். படியின் கல்லுக்கும், கோயிலுக்குள் நீர்ப்படை செய்து கிறுத்தியிருக்கும் தெய்வத்தின் சிலைக்கும் என்ன வேறுபாடு: ஒன்றிற்கு அளவு கடந்த பெருமையும் வழிபாடும் கிடைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/108&oldid=598164" இலிருந்து மீள்விக்கப்பட்டது