பக்கம்:புதிய பார்வை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 9

இருந்ததனால்-இவை புதிய புதிய இலக்கிய வகைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தின. பாரதியின் துரண் g).56 (Influence of Bharathi) @### £majãLt-Égé தமிழ் இலக்கியத்தை வளர்க்கத் துனே செய்தது. வசன கடையில் கவிதையின் நளினமும், கவிதையில் வசன நடை யின் எளிமையும் விரவுகிற அழகிய தமிழ் அமைப்பைப் பாரதி இந்தப் பத்திரிகைகளுக்கும் இவற்றில் எழுதியவர் களுக்கும் உதவியிருந்தான். பாரதியுகத்தின் உத்வேகம் தமிழ்ப் பத்திரிகைகளின் இலக்கிய எழுச்சிக்கும் துணை புரிந்தன. பிற்காலத்தில் பாரதிதாசனின் குயிலும் சுரதாவின் காவியமும் கவிதை இலக்கிய ஏடுகளாக நடக் கவும் இந்தப் பாரதி யுகத்துத் தூண்டுதலே முன் விளைவாக இருந்திருக்க வேண்டும் என்று அதுமானிக்க இடமிருக் கிறது. தமிழ் இலக்கிய ஏடுகளே ஒரு.குறிப்பிட்ட கம்பிக்கை யூட்டும் கிலைக்குக் (Promising Stage) கொணர்ந்த காலம் இதுதான்.

இடைக்கால நிலைகள்

அதன் பின் இடைக்கால எல்லேயில் ஜனரஞ்சக அம்ச மூம் பத்திரிகைத் தொழிலில் கவனிக்கப்பட்டது. கல்கி'யின் எழுத்துப் பணியால் விகடன், கல்கி போன்ற இதழ்கள் சிறப்படையத் தொடங்கின. அவை இலக்கிய எல்லையிலி ருந்து பெருகித் தம்மை இன்னும் எளிமையாக்கிக்கொண்டுவியாபாரமாகவும் மாறின. 'இலக்கியப் பத்திரிகைகள்'என்ற பெயர் குன்றிப் பத்திரிகை இலக்கியம்-என்று குறிப்பிடத்தக்க சில துணை அம்சங்கள் பத்திரிகைத் தொழிலுக்குக் கிடைத்தன. -

அரசியல் தலையங்கம், நகைச்சுவைத் துணுக்குகள், தொடர் கதை, போன்ற அம்சங்கள் மிகமிக எளிமையாக் கப்பட்டன. இலக்கிய கிலேகளேவிடப் பத்திரிகைத் திறன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/11&oldid=597965" இலிருந்து மீள்விக்கப்பட்டது