பக்கம்:புதிய பார்வை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

領28 புதிய பார்வை

-சுமுகமான உறவு

காட்சிக்கு எளிமை, கடுஞ்சொற்களைப் பேசாமை, என்ற இந்தக் குணங்களால்தான் ஒரு மனிதனுடைய பெருங்தன்மை கணிக்கப்படுகிறது. கம்முடைய நாவிலிருந்து பிறக்கும் சொற்கள் பிறருடைய செவிகளில் பூக்கள் உதிர் வதைப் போல அதிர்ச்சி உண்டாகாத வண்ணம் மெல்லச் சென்று கிறைந்து மணக்க வேண்டும். இனிமையும் பண் :பும் உள்ள பேச்சு அப்படித்தான் இருக்க முடியும்.

அருளும் அன்பும் கிறைந்த காமகோடிப் பெரியவர் களுடைய திருமுன்னர் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்கிறவர்களும், தமிழ் முனிவர் திரு. வி. க. அவர்களோடு முன்பு அவர் வாழ்ந்த காலத்தில் அமர்ந்து உரையாடும் பேறு பெற்றவர்களும், பூக்கள் உதிர்வது போல் மணக்க மணக்க அவர்கள் பேசும் மென்மையையும், இனிமையையும் கன்முக உணர்ந்திருக்க முடியும்.

'காட்சிக்கு எளிமை' என்பது தோற்றத்தை மட்டும்

பொறுத்ததில்லை. மலர்ந்த முகம், மலர்ந்த பேச்சு, மலர்ச்சி

யோடு பழகுதல்,-இவையெல்லாம் ஒன்று சேர்ந்துதான் காட்சிக்கு எளிமை:

பெரிய பெரிய அலுவலகங்களிலும், அரசினர் பணி மனேகளிலும் இன்று தேடித் தேடித் தவித்தாலும் கிடை யாத பண்பாக இருப்பதும் இதுதான். தங்களுடைய விலைக்குக் குறைந்தவர்கள் என்கிற காரணத்தால் சிலரைச் சந்திப்பதற்கே பொறுமையின்றி வெறுத்து ஒதுக்குகிறவர் களேயும் அப்படியே தப்பித் தவறிச் சங்தித்தாலும் சிரித்துச் பேசாமல் எரிந்து விழுகிறவர்களையுமே இன்று நம்மைச் சுற்றிலும் அதிகமாகப் பார்க்கிருேம். ஒரு நாட்டின் பொது வாழ்க்கையில் சுமுகமான உறவுகள் இல்லே என்பதைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/130&oldid=598208" இலிருந்து மீள்விக்கப்பட்டது