பக்கம்:புதிய பார்வை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி | 47

உணர்ந்து புரிந்துகொண்டு சுற்றப்புறத்தோடு ஈடுபட்டு வாழவேண்டும்.

சின்னஞ்சிறு கிராமங்களிலும் ஆடம்பரங்கள் நுழை யாத சிறிய ஊர்களிலும் சுற்றுப்புற உணர்ச்சி இயல் பாகவே அமைந்திருக்கும். அகன்ற தெருக்களும், பெரிய வீடுகளும், ஒளிமயமான வாழ்க்கையும் உள்ள நகரங் களிலோ பக்கத்தில் குடியிருப்பவர்களுடைய ஊர் பேர் தெரியாமலே ஒவ்வொரு குடும்பமும் தன் சுகத்திலும், நலத்திலும் மூழ்கி வாழும். ஒரு வீட்டின் சுகதுக்கங்கள் இன்னெரு வீட்டைச் சிறிதளவும் பாதிக்காது. அவ்வளவு ஏன்? ஒரு வீட்டின் சுகதுக்கங்கள் இன்னெரு வீட்டுக்குத் தெரியக்கூட வழியின்றி வீடுகள் ஒவ்வொன்றும் நெருங்கி யிருந்தும் உறவுகளும், உணர்வுகளும் பிரிக்கப்பட்டிருக்கும். ககர வாழ்க்கையின் புதுமைகளிலும் நாகரிகத்திலும், இப்படி உறவுகளால் பிரிந்து போயிருப்பது குறையாகப் படவில்லையானலும் சுற்றுப்புற உணர்ச்சியற்றுத் தனித் தனிச் சுகங்களில் மூழ்கி வாழ்வது சரியில்லேதான். இப்படி நெருங்கி வசித்தபடியே பிரிந்து வாழ்கிற பட்டினத்து நாகரிகக் குறைபாடு என்ருவது ஒருநாள் மாறித்தான் ஆக வேண்டும். இயல்பாகவோ, படிப்படியாகவோ அந்த மாறுதல் சிகழும் காலத்தை எதிர்பார்த்து நம்புவோமாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/149&oldid=598246" இலிருந்து மீள்விக்கப்பட்டது