பக்கம்:புதிய பார்வை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 2 #

கதையில் எழுதியிருக்கிரு.ர். இந்தக் கதையைப் படிக்கும் போதெல்லாம் இதே காலமாற்றச் சூழ்கிலேயை நெல்லைத் தமிழிலே ஒரு நாவலாக எழுதியிருந்தால் தமிழ் மொழிக்கு எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் அடித்திருக்கும் என்று நான் சிங்கிப்பதுண்டு. காவல், விமர்சனம், சிறுகதை, இன்னும் பல புதுமைகள் எல்லாம் தமிழைவிடப் பரம்பரைப் பெருமை குறைந்த மலேயாள, வங்காள மொழிகளில் செழித் திருக்கும்போது தமிழில் மட்டும் ஏன் இப்படி என்று அடிக் கடி நீங்களும், நானும் கேட்டுக் கொள்கிருேம். தமிழின் பழமையும், பரம்பரைப் பெருமையுமே சில சமயங்களில் புதுமையைத் தடுக்கின்றனவோ என்றுகூட கினைக்கத் தோன்றுகிறது. -

காவல் துறை மட்டுமல்ல, எல்லாத் துறையிலும்ே புதிய சாதனைகளால் வளர வேண்டும், பெருமைப் பட வேண்டும் என்பதைவிடப் பழம் பெருமை பேசியே வளரவும் பெருமைப்படவும் ஒரு வலிமை வாய்ந்த கூட்டம் தமிழகத்தில் இருக்கிறது. உலகத்தின் நாலு திசைகளிலு மிருந்து பிரதிநிதிகளே அழைத்து மாபெரும் உலகத் தமிழ் மாநாடு கடத்திவிட்ட் நாம், உலக இலக்கியம் ஏற்கும் ஒரு தமிழ் நாவலைக்கூட இந்த நூற்ருண்டில் இன்னும் படைக்க வில்லை என்பதை எப்படி வெட்கப்படாமல் ஒளிப்பது: உலகம் ஏற்கும் கவிஞர்களைப் பழையவர்களிலிருந்து பாரதி வரை காம் பெற்றுள்ளோம். ஆனல் உரை கடையில் நாளைய யுகத்துக்கு காம் ஏதாவது செய்தாக வேண்டும் அல்லவா? திரும்பத் திரும்ப இரண்டு மூன்று பேர்களேயே தமிழ் வாசகர்கள் அபிமானம் செய்து ஆதரித்துக்கொண் டிருக்கிருர்கள். தேசியக் கண்ணுேட்டமும், அகில உலகப் பார்வையும், "மாதா பராசக்தி வையமெல்லாம் நிறைக் தாய்' என்று உலகை எல்லாம் ஒரு வரியில் அடக்குகிற பாரதியைப் போல் தமிழ் நாவலாசிரியன் ஒருவன் விசுவரூட.

ւյ-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/23&oldid=597989" இலிருந்து மீள்விக்கப்பட்டது