பக்கம்:புதிய பார்வை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 புதிய பார்வை

மெடுத்து வியாபிக்க வேண்டாமா? அந்த கர்ள் எப்போது வரும்:

இப்போது மேல் நாடுகளில் அதிகமாயுள்ள விபரீத ளெக்ஸ் அம்சங்களை வைத்தே சிலர் இங்கே கதைகளும், காவல்களும் எழுத முற்படுகிருர்கள். சுதந்திரத்திற்கு முன்பு கல்கிக்கு இருந்த பிரக்ஞை சுதந்திரத்திற்குப் பிறகும் வேண்டும். விபரீதங்களே விடுத்துப் பெற்ற சுதந்திரத் தைப் பேணிக் காக்கும் தேசியக் கடமையில் இலக்கியத்தின் பங்கைச் செய்ய இவர்கள் முன்வர வேண்டும்

"டான் நதி அமைதியாக ஓடுகிறது' என்று ஷோலக் கோவ் எழுதியது போல் கங்கை அமைதியாக ஒடவும், காவிரி வயல்களை வளப்படுத்தவும் எழுதத் தமிழ் நாவ லாசிரியனுக்குப் பொறுப்புண்டு. -

இந்தியாவின் கிராம வாழ்வில் நூறு வருடங்களுக்கு முன்பே ஓர் அழகு உண்டு. சுகதுக்கங்களில் சமதர்மம் உண்டு. "சோஷலிஸ் யதார்த்தவாதம்' என்று இன்று யாரோ குரல் தருகிருர்கள். நூறு வருடங்களுக்கு முந்திய தமிழ் நாட்டுக் கிராமத்தில் ஒரு வீட்டில் மரணமடைந்த வனே எரிக்க அந்தத் தெருவிலுள்ள அனைவரும் எருவாட்டி கள் கொணர்ந்து அடுக்குவர். கிராமங்களே இன்னும் நமது காவலாசிரியர்கள் கவனிக்கவில்லை. அப்படிக் கவனித்தால் பாரத காட்டின் கிராமங்கள் அவர்களுக்கு எவ்வளவோ எழுத விஷயங்கள் தரும். பாதையோரமாக யார் வேண்டு மாலுைம் சுமை இறக்கி இளேப்பாற ஏற்பட்ட சுமைதாங் கிக் கல், ஆற்றங்கரைப் படித்துறை, ஊர்ப் பொதுச்சாவடி, வயல் வரப்புக்கள், கெற்களம், ஆற்றுப் படுகை, அரச மரத்தடிப் பிள்ளையார், காதில் சொருகிய பென்விலோடு பழுப்பேறிய தீர்வைக் காகிதத்தைப் பார்க்கும் கிராமமணியம், எல்லாம், எல்லாரும் எத்தனை எத்தனை காவல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/24&oldid=597991" இலிருந்து மீள்விக்கப்பட்டது