பக்கம்:புதிய பார்வை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 புதிய பார்வை

வருப்பான வைத்தியப் புத்தகங்களாக இருக்கின்றனவே யன்றி நாவல்களாக இல்லை என்பது உறுதி.

நமது பழைய அணியிலக்கணமே தன்மை நவிற்சி என்று ஒர் அணி வகுத்திருக்கிறது. யதார்த்தம் காவிய காலத்திலேயே நமக்குக் கிடைத்த பழைய சாதனம். யாரும் அதை நமக்குக் கற்பிக்க வேண்டியதில்லை. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதலே அறமாக ஏற்ற நமக்கு அங்கிய நாட்டு சோஷலிஸம் நேற்றையச் சரக்குத்தான். காந்திய சம தர்மமே இந்திய நாவலாசிரியர்களின் லட்சியம். சோஷலிஸ் யதார்த்தம் என்பதை நம் காவல்களேப் பொறுத்த வரை யில் இனி நான் காந்திய யதார்த்தம்' என்றே அழைக்க முடியும். என் நாட்டுக்கு அந்தப் பெயரே பொருத்தமாக இருக்கிறது. இலக்கியமும், தேசமும், கம்பப்படும்போதே உலகளாவிய கல்லெண்ணம் நாவலாசிரியனுக்கு இருக்க முடியும். மார்க்ஸைவிடத் திருவள்ளுவரும் காங்கியுமே எனக் குப் பெரியவர்கள். ஏனெனில் அவர்கள் என் மண்ணில் பிறந்தோராவார். -

"மன்னும் இமயமலை எங்கள் மலேயே மாநில மீதது போற் பிறிதிலேயே'

என்று பாரதி பாடியதுபோல் தேசத்தைப் பற்றிப் பெரு மைப்படாத தேச விசுவாசமற்ற ஓர் இக்திய எழுத்தாள னின் நாவல் எவ்வளவு புகழப்பட்டாலும் அதை நான் மதிக்க மாட்டேன். : -

எத்தனையோ பல்லாயிரம் ஆண்டுகளாகியும் இராமா யணம், பார்தம் என்ற பழைய இந்திய நாவல்கள் கதை யாலும், பாத்திரங்களாலும் இன்னும் நவீனமாகவே உள் ளன. ஒரு பாத்திரத்தைப் போல் வேருெரு பாத்திரம் இல்லாமல் உலகிலுள்ள தலைசிறந்த தீம்"கள் யாவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/28&oldid=597999" இலிருந்து மீள்விக்கப்பட்டது