பக்கம்:புதிய பார்வை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 47?

என்று துணிந்து ஒரு போடு போடுகிருன் பாரதி. பாவ: புண்ணியத்தின் இலக்கணமே இங்கே மாறிவிடுகிறது. இப் படிக் கருத்துப் புரட்சி செய்வதும் ஒரு கிருதயுகமே.

பாரதிக்குப் பின் : சிறந்த கவி ஒருவன் தனக்குப் பின் ல்ை தான் நிரம்பிக் கொண்டிருந்த இடத்தை வெற்றிடம் (Void) ஆகவே விடகேருகிறது. அதுபோல் பாரதி என்ற மகாகவி கின்றிருந்த இடமும் இன்று வெற்றிடமாகவே இருக்கிறது. அதாவது பாரதியின் இணையற்ற பெருமையை, நிரூபிக்கும் சான்று போல் வெற்றிடமாக இருக்கிறது.

பாரதியின் கவிதை பிறந்த காலம் தேசிய, சமூக, சீர்திருத்த இன்றியமையாமையோடு ஒன்றி இருந்தது. இங்த, இன்றியமையாமையைக் (Inevitability) கச்சிதமாகவும், அதிகமாகவும் பூர்த்தி செய்திவிட்டவன் பாரதி. அதுவே. பாரதிக்குப் பிறகு அதே புகழை அடைய முடிந்த ஒரு மகா கவி தமிழில் தோன்ற முடியாமைக்கு ஒரு காரணமோ என்று தோன்றுகிறது. பாரதிதாசன், ச. து. சு. யோகி, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் போன்றவர்கள் மிகச் சிறந்த கவிஞர்களாகப் பெயர் பெற்றிருந்தாலும் பாரதி” யின் கிலேயை எட்ட முடிவதற்கேற்ற தேசிய, சமுதாய, அவசியம் அவர்களே அவாவி நின்று ஒரு இன்றியமை, ய்ாமையை உண்டாக்கிக் கொடுக்கவில்லை. பாரதிக்குப் பின் தமிழிலே வசன இலக்கியம் மகோங்கதமாக வளரத் தொடங்கிவிட்டதல்ை கவிதைகளின் அவசியமும் குறைந்து போனதுபோல் தோன்றுகிறது. வசன நடையில் பாரதி: பரம்பரையின் மூத்த பிள்ளேபோல் புதுமைப்பித்தன் வாய்த்தார்.

சிறுகதை, நாவல், ஜர்னலிசம் நவீன பத்திரிகைத்; தொழில் தேவைகள் எல்லாம் மெல்ல மெல்லத் தமிழைப். பாதித்தன. அங்தப் பாதிப்புக்களுக்குத் தடையாகத்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/49&oldid=598042" இலிருந்து மீள்விக்கப்பட்டது