பக்கம்:புதிய பார்வை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 புதிய பார்வை

'பொய்க்கும் கலியை நான் கொன்று

பூலோகத்தார் கண்முன்னே

மெய்க்கும் கிருத யுகத்தினையே

கொணர்வேன் தெய்வ விதியிஃதே."

என்று பாரதியே சூளுரைத்துக்கொண்டு தொடங்கிப் படைத்தளித்த கிருதயுகம் இது. ஏற்புடைக் கடவுள்களே யும், வழிபடு கடவுள்களையும் வாழ்த்திக் காப்பு, பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் போட் டுக் கொண்டு பாடத் தொடங்கிய பழைய புலவர் மரபின் தழும்பேறிய பழமையை (Conservatism) மாற்றி,

"உழவுக்கும் தொழிலுக்கும்

வங்தனே செய்வோம்

வீனில் உண்டு களித்திருப்போரை

நிந்தனை செய்வோம்'

என்று உழவையும் தொழிலேயும் வாழ்த்திப் பாடத் தொடங்குவதோடு பழைய மரபினும் ஒரு படி முன்னேறி "iணில் உண்டு களித்திருப்போரை கிந்தனே செய்தும் தொடங்குகிருன். வந்தனே மட்டும் செய்து தொடங்குவது. தான் பழைய மரபு. கிங்தனையையும் அங்கேயே செய்து விடுகிருன் நம் கவி. இதுவும் ஒரு மாடர்ன் சென்ஸி. பிலிட்டி. வேண்டியதை வங்தனை செய்வதோடு வேண் டாததை கிந்தனை செய்வதும் துணிவான நம்பிக்கையுள்ள தன்மானமும் சுயமரியாதையுமுள்ள ஒரு நவீன கவியின் இயல்பு என்பதை அறிகிருேம். சாதிகள்தான் புண்ணியம், சாதிகள் அற்ற சிலேதான் பாவம் என்று மது கூறியதைக் கூட மாற்றி, -

"சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/48&oldid=598040" இலிருந்து மீள்விக்கப்பட்டது