பக்கம்:புதிய பார்வை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 45

அசங்திரமதி போன்ற தனிப் பாடல்களில் கூட பாரதியின் குரல் தமிழ்ச் செய்யுள் மரபிலிருந்து பிரிந்து ஆங்கிலக் கவி களின் மைனர் போயம்ஸ் போல் (Minor Poems) தனித் துவமும், பொருட்பொலிவும் உடையதாக விளங்குகின்றது. கிளிவிடு தூது, விநாயகர் நான்மணிமாலை, சத்ரபதி சிவாஜி, காங்தி பஞ்சகம், சுதந்திரப்பள்ளு, முரசு, பாப்பாப் பாட்டு, பாரதி அறுபத்தாறு ஆகிய பாரதியின் கவிதைகள் பழைய தமிழ்ப் பிரபந்தங்களுக்குக் கொடுத்த புதிய உருவ மும் உள்ளடக்கமும் ஆகும். -

வசன கவிதைகள் என்ற பெயரிலேயே பாரதி அளித் திருக்கும் காட்சி, இன்பம், சக்தி, காற்று, உடல், ஜகத் சித் திரம், விடுதலே, ஆகியவற்றில் பொருள் தெளிவும், அதே சமயத்தில் கவிதை நடையிலிருந்து வேறுபட்ட ஒரு உரை கடை ஆவேசமும் கிளர்ச்சியும் உள்ளன. இந்த வசன கடைக் கவிதையில் பொருள் தெளிவும், கவிதா சங்கதமும் இருப்பதால் இவை இரண்டுமே இல்லாமல் பொருள் புரி அயாமை ஒன்றையே இலட்சணமாக வைத்து இப்போது சிலர் எழுதும் 'புதுக்கவிதை"களுக்குப் பாரதியின் வசன கவிதையை முன்னேடியாக (Pioneer) யாரும் கினைக்கவும் கூடாது. சிலர் அப்படிப் பேசி வருவதும் தவறு. அவ்வாறு பேசுவது பாரதியின் வசன கவிதைக்கு இழுக்கும் கெட்ட பெயரும் உண்டாக்குவது ஆகும். எனவே பாரதி தமிழில் செய்யுளாக இருந்த பாடல் மரபுக்கு நவீன சமுதாயத் தன்மைகளையும், தேசியத் தேவைகளையும் இணைத்துப் புது: உத்வேகத்தோடு கூடிய கவிதை அந்தஸ்தை அளித்தான். பாரதிக்கு முன்பு இந்த நவீன உணர்வுடன் கூடிய (Modern Sensibility) கவிதையைத் தமிழில் யாரும் பாடியிருக்க வில்லை. இதுதான் பாரதி தமிழில் படைத்த கிருதயுகம். தமிழ்க் கவிதையில் விளைவித்த கிருதயுகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/47&oldid=598038" இலிருந்து மீள்விக்கப்பட்டது