உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பார்வை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 63:

வேகத்தில் ஒடும் ஒட்டங்கள் சில தோல்வியடைந்தும் இருக்கின்றன. கமா, புல்ஸ்டாப், ஸெமிகோலன், கோடு, புள்ளிகள் போன்றவற்றைக் கொண்டும் அவைகளைப் பழைய இலக்கணச் சூத்திரவிதிகளாகப் பெருத தமிழில் புதுமைகளையும், பொருட் பாகுபாடுகளையும் இன்று விள விக்கிருேம். சொற் சிக்கனத்திற்கும், வாக்கியக் கட்டுக் கோப்பிற்கும், இங்தக் குறியீடுகள் (Punctuation) பெரிதும். உதவுகின்றன. ஆனல் பழைய தமிழில் (ஏடுகளில் எழுதி' வந்த காலத்தில்) வாக்கியம் முடிவதை அல்லது முடியாத, தைப் பொருளுணர்விலிருந்துதான் கண்டுபிடிக்க முடியும். எடுகளில் எழுத்துக்களுக்கு மேற் புள்ளிகள் கூட இடப் பட்டிராது. அச்சுக்கலையின் பாதிப்பிலுைம், மேற்கத்தியத் தொடர்பிலுைம், தமிழ் இந்தப் புதிய பயன்களே எல்லாம் பெற்றிருக்கிறது. இங்தப் புதிய பயன்களே எல்லாம் எப்படி நாம் ஏற்றுப் பயனடைந்திருக்கிருேமோ அதேபோல் பயனும் அழகும் தருகிற பழைய இலக்கண அம்சங்களையும். விட்டுவிடக்கூடாது. .

புத்தகத்தை எடுத்தான்-என்ற வாக்கியத்தில் புத்தகம்-ஐ-எடுத்தான் என்ற மூன்று சொற்கள் இணைந்து சேரும்போது புத்தகத்திற்கும் 'ஐ'க்கும் நடுவில் அத்து என்று ஒரு சாரியைச் சொல் பிறந்து புத்தகத்தை" என்று ஆகி விடுகிறது. இதுதான் வழக்கம். அப்புறம், இதுவே இலக்கண விதியாகவும் கோப்பட்டு விட்டது. இப்போது சிலர் தமிழைச் சொற் சிக்கனத்தோடும். எழுத்துச் சிக்கனத்தோடும் எழுதுவதாக கினைத்துக். கொண்டு, - o - ്.

புத்தகத்தை எடுத்தான்-என்பதை புத்தகம்மை எடுத்தான்-என்று எழுதுவதைப் பார்க்கிறேன். இதன் படி எழுதுவதானல், கீழ்க்கண்டபடி எல்லாமே குழப்ப: மாகும். - . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/65&oldid=598075" இலிருந்து மீள்விக்கப்பட்டது