பக்கம்:புதிய பார்வை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~36 புதிய பார்வை

இலக்கியத்தில் சொற்கள் சுருங்கினல் உணர்வு பெருகும். சொற்கள் பெருகினல் உணர்வு சுருங்கும். பாலில் தண் னிரைக் கலப்பது போலவோ, அல்லது இன்னும் மோசமா கத் தண்ணிரில் பாலேக் கலப்பதுபோலவோ சொற்களே மலிவாக்கும் வாக்கியங்களேயே இன்று தமிழில் அதிகம் காணமுடிகிறது.

"மந்திரம்போல் வேண்டுமடா சொல்வின்பம்"

என்று பாரதிபாடிய தமிழ் பெருகவேண்டும். சக்தி வாய்ந்த

சொற்பிரயோகம் பெருக வேண்டும்.

"கிணற்றுக் கேணிகளிலே பானைக் குடங்கள் கொண்டு பளிங்கனேய பருகுர்ே ஏங்தி மங்கை மடங்தையர் பாதச் சிறடியால் கடை பயின்றனர்.”

என்பதுபோல் ஒவ்வோர் அர்த்தத்திற்கும் இரண்டி ரண்டு வார்த்தைகள் பலியிடப்பட்ட தமிழ் வாக்கியங்களே இன்று ஏராளம். ஒரு தீக்குச்சியில் விளக்கேற்றத் தெரி யாமல் இப்பெட்டி முழுதும் கிறிக்கிறி வீணுக்கி விளக்கேற் றும்-விவரங் தெரியாதவனைப்போலவே ஒவ்வொரு நல்ல தமிழ்ச் சொல்லையும் கமத்துப்போகச் செய்து உரசி எறிப வர்களேயே இன்று நிறையப் பார்க்க முடிகிறது. சிறு கதையில் புதுமைப் பித்தன், கட்டுரைகளில் தி. ஜ. ர, ஆகியோர் நேரான தெளிவான தமிழ் வாக்கியங்களை அழ

குற எழுதியுள்ளார்கள். எளிமையே ஒர் அழகு.

காற்று மெல்ல வீசியது, வேப்ப மரத்து இலகள் -சலசலத்தன-என்று இரண்டு வாக்கியமாக எழுத முடிங் ததையே,

"அந்த வேளையிலே வீசிய காற்று என்னும் தேவனின் கரங்கள் வேப்பமரத்து இலைகளே

. அசைத்தன"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/68&oldid=598082" இலிருந்து மீள்விக்கப்பட்டது