பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 மால்ை, எந்த நாடும் கூடுதலான ஜனத்தொகை யுள்ளது என்று சொல்ல முடியாது... ஆகவே, காம் வேலையைச் செய்து கொண்டே செல்வோம், கடினமான வேலையைச் செய்து கொண்டே யிருப்போம். நாம் பொருள்களை உற்பத்தி செய்வோம், ஆல்ை நாம் படைக்கும் பொருள்கள் தனிப்பட்டவர்களின் கைகளில் போய்ச் சேருவதற் காக அன்று, கம் சமுதாயத்திற்கு அவை உரியவை, மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், சாதாரண மனித னின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்காகவே இதை நாம் செய்தால், இந்தியா வேகமாக முன்னேறு வதை நாம் காண்போம், நம் பிரசினைகளில் பல தாமா கவே தீர்ந்துவிடும். இந்தியாவை மறுபடி நிர்மாணம் செய்வது எளிதான காரியமன்று. காம் பல கோடி மக்களா யிருப்பினும், தேவையான மூலப் பொருள் அமோகமாக இருப்பினும், புத்தி சாதுரியத்துடன் கடுமையாகத் தொழில் செய்யக்கூடியவர்களுக்குக் குறைவில்லாம லிருப்பினும், இந்தக் காரியம் மிகப் பெரிதுதான்... அமைதி யிருந்தால்தான் இது சாத்தியமாகும். சர்வதேச அமைதி வேண்டும், உள் காட்டில் அமைதி வேண்டும், தொழிலாளர் உலகிலும், தொழில் உலகிலும் அமைதி வேண்டும். இந்த அமைதியை நாம் அடைக் தாக வேண்டும். இந்த கேரத்தில் நான் உங்களிடம் பேசுவது தொழிலமைதி பற்றி. நாம் அனைவரும் இந்தப் பொருளுற்பத்திப் போரில் ஈடுபடுவோம். இது தனிப் பட்டவர்களுக்குச் செல்வம் சேர்ப்பதற்காக அன்று என்பதும், தேச சமுதாயம் அனைத்திற்கும் என்பதும் நினைவிருக்கட்டும். ஏனெனில் இந்தியா வாழ்ந்தால், நாமும் வாழ்கிறேம். - -புதுடில்லி ரேடியோ சொற்பொழிவு, 18-1-1948. M H o