பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 தொழில்கள் உற்பத்தி, உற்பத்தி, உற்பத்தி! உற்பத்தி என்பதன் பொருள் செல்வம். நாம் உற்பத்தி செய்யாவிட்டால், போதுமான செல்வம் இராது. விநியோகமும் அதைப் போலவே முக்கியம் தான்; செல்வம் சிலர் கையில் குவிந்து விடாமல் பார்த் துக் கொள்ளவேண்டும்; எனினும், விநியோகத்தைப் பற்றி காம் சிந்திக்கு முன்பாக, உற்பத்தி பெருகி யிருக்க வேண்டும்...... நம்முடைய நிலங்களிலிருந்தும், ஆலைகளிலிருந் தும், தொழிற்சாலைகளிலிருந்தும் செல்வம் ஆருகப் பெருகி வரவேண்டும், வந்து கம் காட்டிலுள்ள கோடிக் கணக்கான மக்களின் கைக்குக் கிடைக்க வேண்டும், இறுதியில் இந்தியாவைப் பற்றி காம் கண்டு கொண்டிருந்த கனவுகள் நிறைவேறுவதைப் பார்க்க வேண்டும்...... இப்பொழுது, பொருளுற்பத்தி என்றல், கடின மான வேலை என்று பொருள், இடைவிடாத வேலை என்று பொருள். பொருளுற்பத்தி என்ருல், வேலையை நிறுத்தாமை, வேலை நிறுத்தம் செய்யாமை, கதவ டைப்புச் செய்யாமை என்று பொருள்... தற்போதுள்ள கம் மக்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும்படி செய்ய முடியும், இதன் மூலம் காட்டின் செல்வமும் அதிகரிக்கும், வேலையில்லாத திண்டாட்ட மும் நீங்கும், ஒவ்வொருவருக்கும் வேலை கிடைக்கு