பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 வர்கள் கூட்டுறவு ஸ்தாபனங்களின் மூலம் பெருக்க லாம். முதல் முறையில் குடியானவர்கள் கசக்கப்படு வார்கள், கொடுமைக்குள்ளாவார்கள். ஆகையால் நாம் இரண்டாவது முறையை மேற்கொள்ள வேண்டி யிருக்கிறது. நாம் உணவு உற்பத்தியை மட்டும் கவ. னிக்காமல், மனிதர்களின் முன்னேற்றத்தையும் சேர்த் துக் கவனிக்க வேண்டும். உணவு உற்பத்தியுடன், மனிதர் கலனையும் மறக்காம லிருக்க வேண்டும். மனிதர் கலனை மறந்து விட்டால், நாளடைவில் உணவு உற் பத்தியும் குறைந்துவிடும். இதல்ைதான், முதலாளித் துவ நாடுகள் உட்பட, ஒவ்வொரு நாட்டிலும் நிலப் பிரபுவை நீக்கி விட்டனர். இதற்கு உதாரணமாக ஜப்பானேக் கூறலாம். ஜப்பானிலிருந்த அமெரிக்க ஐக்கிய காடுகளின் அரசாங்கம் நிலப் பிரபுத்துவ முறையை ஒழிப்பதற்கு ஜப்பானியருக்கு ஊக்க மளித்து வந்தது. ஐக்கிய நாடுகளின் அரசாங்கத்தை சோஷலிஸ்ட் அரசாங்கம் என்று யாரும் சொல்லமாட் டார்கள். கம் மக்களில் சிலர் இந்த கவீனப் போக்கை முற்றிலும் புரிந்து கொள்ளாம லிருக்கின்றனர். -டிெ டிெ 書 கூட்டு உழைப்பு கூட்டு விவசாயம் தனி விஷயமாதலால், இப் பொழுது அதைப் பற்றி கான் குறிப்பிடாமல், பொது வாகக் கூட்டுறவைப் பற்றியே கூறுகிறேன்கூட்டுறவுதான் காங்கிரஸ் சபையின் அடிப்படைக் கொள்கை. நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தில் "கூட்டுறவு காமன் வெல்த் பற்றிச் சொல்லியுள்ளோம். தொழிலில் கூட்டுறவு பற்றிப் பேசுகிறேம். எப் பொழுதும் அதைப் பற்றியே பேசி வந்துள்ளோம்.