பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 கள் நிரம்ப முடியாது. மக்களிடையே நிலைத்துள்ள பொருளாதாரத் துண்டுதல் அவர்களுடைய எழுச் சியை வளர்த்துக்கொண்டே யிருக்கும்.'

  1. 1; 事 +

'இந்தியாவிலுள்ள வகுப்புப் பிரசினை என்பது போலியான ஒன்று-இது பிற்போக்கான பிரசினை. அரசியல் பிற்போக்குவாதிகள், தேசத்தின் முன்புள்ள உண்மையான அரசியல் பிரசினைகளைக் காண முடியா மல், குழப்புவதற்காகக் கிளப்பும் பிரசினே இது. இந்தியாவிலுள்ள வகுப்புவாத ஸ்தாபனங்கள், முஸ்லிம் ஸ்தாபனமாயினும், இந்து ஸ்தாபனமாயினும், அவை அரசியல் பிற்போக்கையே ஆதரிப்பவை...' 菲 書 H எட்டாவது விசாரணை இரண்டாவது உலகப் போர் 1939-ல் தொடங் கியதும், இங்கிலாந்து இந்தியாவையும் போரில் ஈடு படுத்தியது. அப்பொழுது இந்தியாவில் பெரும் பாலான மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபைகள் அமைந்து வேலை செய்து கொண்டிருந்தன. போரைப் பற்றி அரசாங்கம் காங்கிரஸ் மகாசபையிடமோ, காங்கிரஸ் மந்திரி சபைகளிடமோ கலந்து கொள்ள வில்லை. காங்கிரஸ் ஹிட்லர், முஸொலினி முதலியோ ரின் யதேச்சாதிகாரக் கொள்கைகளையோ, அவர்கள் புரியத் தொடங்கிய கொடுமைகளையோ ஒரு நாளும் ஆதரிக்க முடியாது. ஆயினும் பிரிட்டிஷ் அரசாங் கத்தையும், அதற்கு உட்பட்ட இந்திய அரசாங்கத்தை யும் அது ஆதரிக்கவும் முடியாத நிலையிலிருந்தது. முதலில் யுத்தத்தின் இலட்சியங்கள் என்ன என்பதை