பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 உணவையே அதிகமாய் விரும்புவான். ஆகவே அரசி யல் ஜனாாயகம், மேற்கொண்டு படிப்படியாகப் பொரு ளாதார ஜனநாயகத்தைப் பெறுவதற்கே அதிகமாய்ப் பயன்படும். வாழ்க்கைக்கு வேண்டிய கல்ல விஷயங் கள் நாளுக்கு நாள் அதிக மக்களுக்குக் கிடைக்க வேண் டும், மிகவும் மோசமான ஏற்றத் தாழ்வுகளும் நீக்கப் பட வேண்டும். அரசியல் ஜனநாயகமுள்ள காடுகளில் அந்தக் காரியம் கடந்து வருகின்றது என்பதில் சந்தேகமில்லை. - டிை டிை + #: + மக்கள் தாமே தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளல் நாம் ஜனாாயகத்தில் கம்பிக்கை கொண்டிருக் கிருேம். என் சம்பந்தப்பட்ட மட்டில் கான் அதில் கம் பிக்கை கொண்டிருக்கிறேன்; ஏனெனில் அது இலட்சி யங்களை அடையச் சரியான மார்க்கம் என்று நான் கருதுகிறேன், மேலும் அது அமைதியான வழிய மாகும். இரண்டாவதாக, வேறுவித அரசாங்க அமைப் புக்கள் தனி மனிதன்மீது செலுத்தும் பலவந்தமான கட்டுப்பாடுகளை அது நீக்குகின்றது. அதிகாரத்தைக் கொண்டு ஆண்டு அடக்குவதைத் தனி மனிதன் தானே தன் இன ஒழுங்குபடுத்திக் கொள்ளும் சுயமான கட்டுப் பாடாக அது மாற்றுகின்றது. சுயமான கட்டுப்பாடு என்பது, சில முடிவுகளை ஒப்புக் கொள்ளாத சிறுபான் மைக் கட்சிக்காரர்களும் முரண்பட்டு நிற்பதைவிட அவைகளே ஏற்றுக் கொள்வதே மேல் என்று எண்ணும் படி செய்யும். முதலில் அவைகளை ஏற்றுக்கொண்டு, பிறகு, அவசியமானல், அவைகளை அமைதியான முறைகளில் மாற்றிக் கொள்ளலாம் என்ற மனப்பான் மையை அது உண்டாக்கும். ஆகவே ஜனாாயகம்