உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பொலிவு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சம்பாதிக்கிறாங்கன்னா, அவங்களுக்குச் சூட்சமபுத்தி இருக்கு சுறு சுறுப்பு இருக்கு......நம்ம புத்தியைச் சொல்லு, ஒரே மந்தம்......"

"போடா, போ! எங்க மில்லுக்கு ஒருத்தன் வாரான், முதலாளிகிட்டப் பேசறதுக்கு, எப்பவாவது. பெரிய பொதியன்—முகத்தைப் பார்த்தாலே முழு மூடம்னு தெரியும்—அவன் எவ்வளவு இலட்சம் சம்பாரிச்சு இருக்கான் தெரியுமா? ஐஞ்சாறு இலட்சம் இருக்கும்னு சொல்றாங்க......எல்லாம் பிராந்தி உஸ்கி வித்துத்தான்....இதிலே புத்திசாலித்தனம் என்ன தேவைப்படுதாம்! குடிக்கிறவனுங்க, கண்ணு மண்ணு தெரியாமெ விலை கொடுக்கறானுங்க. போதை, வெறி, இதனாலே, இலாபம் மத்த வியாபாரத்தைக் காட்டிலும் அதிகமா வருது, குவியுது. மத்தவனோட முட்டாள் தனத்தாலே இலாபம் வந்ததே தவிர, இவனோட புத்திசாலித்தனத்தாலே என்ன இருக்குதாம். அவனைப் பள்ளிக்கூடத்திலே, சுத்த மக்குன்னு சொல்லியே துரத்திவிட்டாராம், வாத்தியாரு.......இப்ப இவனோட வாடகைக் கணக்கு எழுதிப்பிழைக்கறாரும் பெரிய அறிவாளின்னு சொல்றாங்க அந்த ஆசாமியை......"

"அதுசரி, இப்பத்தான் மதுவிலக்கு இருக்கே......"

"ஆமாம், மதுவிலக்கு இருக்குது; கடைவச்சி விற்கக் கூடாது, அவ்வளவுதானே....."

"அப்படின்னா......?"

"இப்ப 'கடை'க்கு மனஷாள் போறதில்லே, 'கடை' மனஷாளைத் தேடிக்கிட்டுப் போகுது!! திருட்டு வியாபாரம் நடக்குது. முன்னாலே பகிரங்கமா வியாபாரம் செய்தான், இப்ப, அதுவே, இரகசியமா நடக்குது, இப்படித்தான் முன்னையைப்போல் மூணுமடங்கு இலாபம். எங்க மில்காரன் கிட்ட அவன் வாரானே, எதுக்கு? எல்லாம் இதுதான்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/31&oldid=1576211" இலிருந்து மீள்விக்கப்பட்டது