உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பொலிவு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

"அப்படியா சமாசாரம். ஆனா அதெல்லாம் பெரிய இடத்திலே......தலைகாஞ்சதுக எங்கேயிருந்து வாங்கப் போகுதுங்க.......அவங்களைப் பொறுத்தவரையிலே மது விலக்கு நிஜமாத்தான் இருக்கு......"

"அதுவும் தப்புதான், அவங்கமட்டும் என்னவாம்! பொதியன் பாட்டில் சரக்கு விற்கிறான், மத்தவன் மட்டம் விற்கறான்......"

"மட்டம்......?”

"காச்சினதுடா! இப்ப அந்த வியாபாரம் தான் கன ஜோர்.....நானே மாசத்திலே ஒரு அஞ்சு பத்து அதுக்குத் தொலைக்கறேன்."

"அடப்பாவி!..."

"என்ன நய்னா கவனிக்காமலே போறே? என்னதான் வாழ்வு ஒசந்தூட்டாலும் இப்படி நட்டுப் பொட்டிட்டுக்கக் கூடாது......" என்று ஆரம்பித்த மூலைக்கடை முத்தையன், "அதுக்கென்ன அண்ணேன் ! ஆசாமி 'டாப்' திறந்துடறேன்...நம்மைச் சரியாவே கவனிக்கிறதில்லே... என்னடா எஜமானுக்குத்தான் உன்மேலே உசிராமேன்னு நம்ம ஐதைக்காரனுங்க பேசரானுங்க இங்கே சரிவர நம்யைக் கவனிக்க, ஆள்கிடையாது. எவ்வளவு கண்ணுங்கருத்துமா நான் கவனிக்கிறேன், ஒரு காக்கா குருவிக்குத் தெரியுமா ரகசியம்? அப்படி எல்லாம் பாடுபடறேன், ஏழைமேலே இரக்கம் காட்டாம இருந்தா நல்லதா சொல்லுங்க" என்று கெஞ்சிக் கூத்தாடிப் பேசி, தாக சாந்திக்கு உதவி கேட்டுப் பெறும் அளவுக்கு, வேலப்பனுடைய நிலைமை ஒரு ஆறே மாதத்தில் உயர்ந்துவிட்டது. ஆசாமியின் நடை உடை பாவனையே மாறிவிட்டது...தொழில் அவனைப் புது ஆளாக்கிவிட்டது. சுருள் மீசை—சந்தனப் பொட்டு—விரலிலே சிகரட்டின்—இப்படி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/32&oldid=1576214" இலிருந்து மீள்விக்கப்பட்டது