உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பொலிவு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

கிராமீய வாழ்க்கை ஒரு தனித்தன்மை கொண்டது—பொதுவான இயல்புகள் எங்கும் உண்டு என்றபோதிலும். கிராமீய வாழ்க்கையின் இனிமைபற்றிப் பேசும்போதும் எழுதும்போதும், கிராமங்களுக்கென்று அமைந்துவிடும் சில தனித்தன்மை வாய்ந்த எழில் குலையாமலிருக்கும் கிராமத்தை மனதிற்கொள்கிறோம். இது பெரிதும், இன்று கிராமங்கள் உள்ள நிலைமையாக இல்லை. கிராமம் என்ற உடன், மடுவும் மாடு கன்றும், மலரும் மணமும், கள்ளங்கபடமற்ற வாழ்வும் கலகலப்பு ஒலியும், பசுமையும் இனிமையும், நமது மனக் கணமுன் தோன்றுகின்றன. இன்று இந்த நிலை, உருக்குலைந்த ஓவியமாக்கப்பட்டு விட்டிருக்கிறது. இந்நிலையிலும், கிராமத்துக் கவர்ச்சி என்பது முற்றிலும் பொருளற்றதாகி விடவில்லை.

புதிய பொலிவு இத்தகைய ஒரு கிராமத்தில், பாடுபட்டுப் பிழைக்கும் ஒரு குடும்பத்தின் நிலையை மைய்யமாகக் கொண்ட கதை.

கிராமத்தில் இருந்தபடியே தனது நிலையை ஏற்ற முள்ளதாக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் குடையும் மனதினராக உள்ளனர் ஆங்கு உள்ள இளைஞர்கள்.

கிராமத்திலே, எப்போதும்போல இருந்துவந்தால், போதுமான வசதிகளைப் பெறமுடியாது என்ற மனக்குறையும், முறைகளை மாற்றிக்கொண்டாகிலும் புதியநிலை பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞன், புதிய பொலிவு பெற, நகரம் செல்கிறான்; அங்கு குறுக்குவழி நடந்து, இருந்த பொலிவும் குன்றிப் போகிறான். கெடுமதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/4&oldid=1575576" இலிருந்து மீள்விக்கப்பட்டது