உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய பொலிவு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

கொண்டவன் அல்ல—கெட்டுப்போனவன் —அவன்பால் இரக்கம் காட்டவே நல்லோருக்குத் தோன்றும்.

அவனுடன் ஓடி ஆடி வந்த எழில் மங்கை, செல்லி. அவனுக்காகவே இவள்! என்று கண்டோர் கூறினர்: அந்தப் பேச்சு அவளுக்குத் தேனென இனித்தது. அந்தச் சுவை தவிர வேறு முறையற்ற செயல் மூலம் சுவைதேட முற்பட்டவளல்ல செல்லி. மாசுபடாத மங்கை.

செல்லிக்கு, எதிர்பாராத முறையில் நகரத்து நல்லிளைஞன் கணவனாக வாய்க்கிறான்—ஓவியன். நகரத்துப் பளபளப்புக்கு மத்தியில் வாழ்ந்தபடி கிராமத்து எழிலை எண்ணி மகிழ்ந்து வந்தவன். அவனைச் சூழ இருந்து வந்தவர்கள் புதுப்பூச்சுகள் நிறைந்த உலகினர்.

இந்த இடம் வந்து சேருகிறாள் செல்லி. புதிய உலகம்! அவள் ஒரு கேலிப் பொருளாக்கப்படுகிறாள் 'நவநாகரிக'க்காரர்களால் அவள் வாழ்வே கருகிவிடும் நிலை கிளம்புகிறது; எனினும், கணவனுடைய உள்ளன்பு அவளைக் காப்பாற்றுகிறது.

கணவன் காட்டும் உள்ளன்புதான், மனைவியின் வாழ்விலே ஒளியைத் தரும் — அந்த ஒளி கிடைக்கப் பெற்றால், புதிய பொலிவு எழும் என்பதை எடுத்துக்காட்ட இந்தக் கதை.

செல்லி, துள்ளி விளையாடும் வயலையும் மடுவையும்காணச் செல்லுங்கள்.

அண்ணாத்துரை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பொலிவு.pdf/5&oldid=1575577" இலிருந்து மீள்விக்கப்பட்டது