பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தைப் படைப்பு புதுக்கவிதை எனப் பெயர் பெற்றது. பொருத்தமே யாகும்.

பார்க்கப் போனால், கவி சுப்ரமணிய பாரதி தனது எல்லாக் கவிதைகளையுமே புதுக்கவிதை என்று தான் குறிப்பிடுகிறார்-அந்நாள் வரை இருந்து வந்த தமிழ்க் கவிதைகளிலிருந்து அவை மாறுபட்ட தன்மைகளைப் பெற்ற படைப்புகளாக விளங்கியதால்.

‘சுவை புதிது, பொருள் புதிது வளம் புதிது,
சொற்புதிது, சோதிமிக்க
நவகவிதை’

என்று பாரதியார் தன் கவிதைகளைப் பற்றிப் பெருமையோடு பேசுகிறார்.

தனது கவிதா உணர்வுகளையும். உள்ளத்தின் எழுச்சிகளையும், கனவுகள் கற்பனைகள் எண்ணங்கள் அனைத்தையும் மரபு ரீதியான - யாப்பு முறைகளுக்கு உட்படும் - கவிதைகளின் விதம் விதமான வடிவங்களில் வெளிப்படுத்திய கவி பாரதி, இலக்கணத்துக்கு உட்படாத புதிய வடிவத்திலும் உருக்கொடுக்க முயன்று வெற்றியும் கண்டார். அது தான் 'காட்சிகள்’ என்ற வசன கவிதைத் தொகுப்பு.

பாரதி தன் எண்ணங்களை எழுத்து ஆக உருவாக்குவதற்குப் பல சோதனைகளில் ஆர்வம் கொண்டிருந்தார் என்பது அவரது படைப்புகளை ஆராய்வோருக்குப் புரியும். கவிதைகளில் பல சோதனைகள் செய்தது போவே, வசனத்தில் தராசு, ஞானரதம், நவதந்திரக் கதைகள் போன்ற புதிய முயற்சிகளை அவர் செய்திருக்கிறார். அதே தன்மையில், வசனத்தை மீறிய ஆயினும் கவிதையின் பூரணத்துவத்தை எய்தாத ஒரு முயற்சியாக அவர் படைத்துள்ள வசன கவிதைகளே ‘காட்சிகள்’. எனவே, கவி சுப்பிரமணிய பாரதிதான். தமிழ்ப் ‘புதுக்கவிதை’யின் தந்தையாவார்.

பாரதியின் ‘காட்சிகள்’ வசனம் தான் ; அவரது படைப்புகளைத் தொகுத்துப் பிரசுரித்தவர்கள் தவறுதலாக அவற்றையும் கவிதைகளோடு இணைத்து, வசன கவிதை என்று வெளி-