பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$62

புதுக்கவிதை புது வாழ்வின் எதிரொலியாம். வாழ்க்கை யின் இன்றையச் சிக்கலே சிக்கலாகக் காட்டும் சிந்தனை வெறியாம். சிக்கலைச் சுலபமாக்கி சுகம் தேடும் மனப் பிராந்தி அன்று.

புதுக் கவிதை சங்ககாலத்துப் பேச்சுச் சந்தத்தை அஸ்திவாரமாக்கிக் கொண்டு எழுதக்கூடாது என்பதில்லை.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்கிற சந்தம் எல்லா காலத்துக்கும் பொதுவானது தான்.

புதுக் கவிதை ஏமாற்றத்தை, ஏக்கத்தைத் தான் எதிரொலிக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை.

மேலே நாடுகளில் அப்படியென்ருல்: ஆனேக்கு அர்ரம் என்பதில்லை. -

புதுக்கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் போல: விமர்சனம் போல, இலக்கியத்தில்-தமிழ் இலக்கியத்தில் ஒரு புதுத்துறை.

அது இன்னும் கவிதையாகி விடவில்லை. புதுக்கவிதை எழுதுகிற பத்திருபது பேர் தொடர்ந்து எழுதி வந்தால் புதுக்கவிதை கவிதையாகிற பக்குவம் பெற 歌》醇”蓋。

அதுவரை அது ஒரு சோதனைத் துறை.

(இலக்கிய வட்டம் 23-10-64) சோதனை ரீதியில் கவிதை படைத்து வந்த அமெரிக்க, ஐரோப்பியக் கவிஞர்கள் பலரது கவிதைகளின் மொழி பெயர்ப்பு இலக்கிய வட்டம் இதழ்களில் பிரசுரமாயின.

க. நா. சு, மயன்" என்ற பெயரில் கவிதைச் சோதனைகள் நடத்தி வந்தார். அவரது சோதனை முயற்சிக்கு ஒரு உதாரணமாக முச்சங்கம்’ என்பதைத் தருகிறேன்.

தார்த்தாரிப் பரந்தி - புல் வெளியிலே பல் லாயிரம்