பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

கூட எதுவும் தெரியாது என்பேன். இனிமேலாவது இவர்களுக்கு இலக்கிய அறிவைப் புகட்ட முடியும் என்ற தம்பிக்கையும்கூட இவர்கள் இதுவரை அளிக்கவில்லை. இவர்களைத் திருத்த முயல்வது விண்வேலே என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

  • தாமரையும் புதுக்கவிதையின் போக்கைக் குறைகூறி எப்போதாவது கட்டுரைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தது. அதே சமயத்தில், இப்பத்திரிகைகள் புதுக் கவிதை யைப் புது படைப்பாகவோ மொழி பெயர்ப்பாகவோ பிரசுரிக்கத் தயங்கவுமில்லை.

சென்ஆனயில் நிகழ்ந்த இலக்கியக் கூட்டங்களும் புதுக் கவிதை மீது தனிக் கவனம் செலுத்தி வந்தன.

இதளுல் எல்லாம், ஜனவரி 1967ல் தனது 97வது ஏட்டின் தலையங்கத்தில் எழுத்து பெருமையுடன் குறிப்பிட நேர்ந்தது

  • புதுக்கவிதை நிலைத்துவிட்டது. புதுக்கவிதை என்பதுக்கு பதில் தற்காலக் கவிதை என்றே இனி நாம் குறிப்பிடலாம். தமிழை முறையாகப் படித்தவர்கள், யாப்பிலக்கணம் அறிந்தவர்கள் உள்பட புதியவர்களின் கவிதைகள் எழுத்துக்கு முன்னேவிட அதிகமாக கிடைக் கின்றன ...

சரி. கவிதைகள் பெருகினல் போதுமா, கவிதைகளை ரசிக்கச் செய்ய? போரில் எதிராளியிட்மிருந்து இடத்தைப் பிடித்துவிட்ட பின் அடுத்து செய்ய வேண்டிய வேலை, பிடித்த இடத்தை ஆர்ஜிதப்படுத்திக் கொள்வதுதான். அதுக்குப் பின் தான் மேலே முன்னேற்றம். அதே போல இலக்கிய சோதனை முயற்சிகள் செய்து வரவும், செய்த அளவுக்கு கணிப்பு செய்வது அடுத்த வேலை."

அந்த இதழ் முதல் சி. கனகசபாபதி பாரதிக்குப் பின் தமிழில் புதுக்கவிதை” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. .