பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26s;

எழுத்து 115-ஆம் இதழில் மெரீன என்ற 444 வரிக் கவிதையை செல்லப்பா எழுதியிருக்கிருர். இதுவும் ஒரு சோதனைப் :படைப்புதான். மெரீனு’ சம்பத்தமாக செல்லப்பா குறிப்பிடுவது இது: 'பரிபாடல் கவிதைகளே படித்து ரசித்துக் கொண்டிருந்தேன். அதே சமயம் தொல்காப்பியம், யாப்பருங்கலம் விருத்தி, காரிகை, பன்னிரு பாட்டியல் முதலிய யாப்பு நூல்களையும் உரை யுடன் படித்தேன். அதன் விளைவாக பிறந்தது மெரீளு. பரிபாடலுக்கு எல்லை 400 அடிகள் என்று தொல்காப்பிய சூத்திரம் கூறுகிறது. என்னுடையது 444 அடிகள் கொண்டது. மரபை அறிந்து அதை மீற வேண்டிய அவசியம் வருகிறபோது மீறித்தான் ஆகவேண்டும் என்று கருதுபவன் நான். இந்த நீண்ட கவிதையில் என்னெல் லாமோ கையாள முயன்றிருக்கிறேன் . இலக்கணம் பற்றிய சில குறிப்புகளை தொடர்ந்து இணைத்திருக்கிருர், இலக்கண விதிகளுக்கு உட்படுதல், இலக்கணப் பிழைகள் பற்றி எல்லாம் இலக்கணப் பிரியர்கள் குழம்பியும் குழப்பியும் பொழுது போக்கட்டும். -

25. கடை

"எழுத்து காலாண்டு ஏடு ஆக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, எழுத்து வின் போக்கில் அதிருப்தி அடைந்துவிட்ட இளைய நண்பர்கள் சிலர் "நடை" என்ற பெயரில் இலக்கிய முத்திங்கள் ஏடு ஒன்றை ஆரம்பித் தார்கள், அக்டோபர் 1 6 ல் தோன்றிய நடை: சேலத்தி லிருந்து வெளிவந்தது,

'நடை இலக்கிய முத்திங்கள் ஏடு. இலக்கியப் படைப்புக்கும் திறய்ைவுக்கும் என்றே வருகின்ற ஏடு இதுபோன்ற ஏடு தமிழுக்குப் புதிதல்ல. என்ருலும் நடை பல வகையிலும் மாற்றம் உடையது .இந்த மாற்றம் நடையினது நோக்கத்தின் அடிப்படையில்