பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாக்கி நாளு என்ன செய்வேன் சொல்லு பாப்பம் சொக்கா! சப்புன்னு இருக்கு சீவன் o

செத்துப் போனத் தேவலாம், இதேபோல கள்ளுப் போன போட்டும் போடா எனக்கு சொக்கி இருக்கா சொக்கா என்று முடியும் ரசமான

கவிதை ஒன்றும் உண்டு.

3. சுவையான விவாதம்

க. நா. சுப்ரமண்யம் அந்நாட்களில் கவிதை எழுது வதில் உற்சாகம் காட்டியதில்லை. என்ருலும், முதன் முதலாக, யாப்பிலாக் கவிதையான வசன கவிதை சம்பந்த மாய் கருத்து மோதல்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த பெருமை அவருக்கே உரியது.

சூருவளி வாரப் பத்திரிகை 1939 ஏப்ரலில் பிறந்தது. க. நா. சுப்ரமண்யம் நடத்திய அப் பத்திரிகை கவிதையில் அதிக அக்கறை காட்டவில்லை. ச. து. சு. யோகியாரின் படைப்பு எப்பவாவது இடம் பெற்றுக் கொண்டிருந்தது,

என்ருலும், சூருவளி நான்காவது இதழில் மயன் எழுதிய வசன கவிதை வந்தது. க. நா. சு. தான் மயன்

மனப் பெண்

திரையிட்டு மறைத்த முகமும் பெண் மை ஏசும் பட்டாடையும் மறைத்து வைக்கும் உண்மை அறியா வண்ணம் அழகி என்று அவளே அறிவ தெப்படி?

அவள் அழகி ஆடை உடுத்தி அழகு படுத்தி அலங் கரித்து