பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

எழுத்து ஆசிரியர் சி. சு. செல்லப்பா தமது பத்திரிகை யின் மூலம் புதுக்கவிதை வளர்ச்சிக்கு சிறப்பான சேவை புரிந்ததுடன், எழுத்து பிரசுரம்'களாகக் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டும் போற்றத் தகுந்த பணி ஆற்றியிருக்கிருர். ந. பிச்சமூர்த்தி கவிதைகளைக் தொகுத்து 1962 ஆகஸ்டில் காட்டு வாத்து’ என்ற புத்தகமாக அவர் பிரசுரம் செய்தார். பிச்சமூர்த்தி 1938-1914 காலகட்டத்தில் எழுதிய கவிதைகள் இருபதும், 1959க்குப் பிறகு எழுதி யவை பதினேந்து இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

பிறகு, 24 கவிகளின் 63 கவிதைகளை சேர்த்து புதுக் குரல்கள் என்ற தொகுப்பாக 1962 அக்டோப்ரில் செல் லப்பா பிரசுரித்தார். பிச்சமூர்த்தி 1962 க்குப் பின்னர் எழுதிய கவிதைகள் பலவற்றையும் 1945 க்கு முன்பு எழுதிய ஐந்து கவிதைகளையும் சேர்த்து வழித்துணை என்ற புத்தகமாக 1964 ஏப்ரலில் அவர் வெளியிட்டார்.

தி. சோ. வேனுகோபாலன் எழுத்து இதழ்களில், எழுதிய கவிதைகள் தொகுக்கப் பெற்று கோடை வயல்: என்ற புத்தகமாக 1955 ஆகஸ்டில் வெளிவந்தது.

'கண்ணுக்குள் திரை இருப்பதைக் கூட உணராத சமூகத்தைப் பார்த்து ஏமாற்றம் ஏக்கம், கோபம் மூன்றும் கலந்த உணர்ச்சி வேணுகோபாலன் கவிதைகளில் ஒலிசெய்கிறது. இலக்கிய ஞான சூன்யம் மேலோங்கி நிற்கிற நிக்லமையும், சுதந்திரம் பெற்றும் நாட்டில் நிலவுகிற தத்துவ தரிசனக் குழப்ப நிலையும், நிகழ்கால சமுதாயம் வலிமையற்றிருப்பதை மறக்க, மரபென்றும் பண்பென்றும், பண்டைய கால வாழ்வு என்றும் மதுவின் போதை வசப்பட்டு ஏற்படும் தடுமாற்றம், அதல்ை விளையும் தவருண மதிப்பீடு' ஆகியவைகளும் அவர் உள்ளத்தில் ஏற்படுத்தும் சலனங்கள் தாக்குதல்களாகவும் பரிகாசக் கணகளாகவும் அவரது கவிதைகளில் வெளிப்பட்டுள்ளன. வேணுகோபாலனைப் போலவே தனித்த நம்பிக்கை களும் நோக்கும் மனப்போக்கும் கொண்டவர்கள், பல