பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22.2

கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் தேர்ந்தெடுத்து, கவிதை யாக இசைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட முன்வந்த போது, எழுத்து அவர்களுக்கு நல்ல அரங்கமாக உதவியது.

எழுத்து ஏடுகளில் கவிதை எழுதியவர்கள் பலரும் தத்தமக்கெனத் தனியான வாழ்க்கைப் பார்வையும், மதிப்பு களும், தத்துவ நோக்கும் கொண்டவர்கள். தங்கள் கருத்துக்களை கவிதையாக்குவதற்கு தனித்தனி உத்திகளைக் கையாளும் முயற்சியிலும் அவர்கள் ஆர்வம் காட்டி யுள்ளார்கள் என்பதை எழுத்து காலக் கவிதைகள் எடுத்துக் காட்டுகின்றன.

கவிதை மனநெகிழ்ச்சியை, மன அசைவை அடிப் படையாகக் கொண்டது என்பதை கருத்தில் கொண்டு அவர்கள் கவிதை படைத்திருக்கிருர்கள். எண்ணத்துக்கு உருவாகாமல் பிரக்ஞை நிலையிலேயே இருக்கும் அக உளைச்சல்களையும் வாழ்க்கையும் சூழ்நிலையும் காலமும் தம்முள் சேர்க்கிற மனப்பதிவுகளையும், ஒரு கட்டுக்கடங்காத மனப்போக்கையும் எழுத்தில் வெளியிட அநேகர் ஆசைப் பட்டுள்ளனர் என்பதையும் எழுத்து காலக் கவிதைகள் விளக்குகின்றன.

எழுத்து காலப் புதுக்கவிதைகளில் பெரும்பாலும் வெறுமை, மனமுறிவு, விரக்தி, நம்பிக்கை ஊட்டாத தன்மை போன்ற குரல்களே ஒலிக்கின்றன என்று பொது வாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. - வாழ்க்கையின் போக்கும், சூழ்நிலை பாதிப்புகளும், நாட்டின் நிலைமையும் தனி மனிதர்களிடையே வேதனையை, விரக்தியை, ஏமாற்றத்தை, ஏக்கத்தை, ஏலாக்கோபத்தை, நம்பிக்கை வறட்சியைத்தான் விதைத்து வளர்க்கின்றன.

சுதந்திரம் வந்துவிட்ட பிறகு, சுதந்திர நாட்டிலே, ஃப்ரஸ்ட்ரேஷனுக்கு (மனமுறிவுக்கும்) இடமே இல்லை என்று கூட ஒரு விமர்சகர் கூறியுள்ளார்.