பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமபாண பூச்சியும் காதுடன் உறவாடும் உபதேசப் பந்தலும் காசுக்குத் தூண்டிலிடும் கலாசாரக் கைகளும்தான் மிச்சம், கோபுரச் செருக்கொலிக்க வாழ்வுக்கு வழிகாட்டும், வரையோட்டுச் சாத்திரம் சொல்ல நான் வரவில்லை சுய நலத்தைப் பொதுத் தொண்டாக்கும், ஜாலக் கண்ணுடி வித்தை, காட்ட நான் பாடவில்லை.”

பழவேதப் படையை ஒட்டி லோகாயத வேதப் படையின் தமுக்காய் ஒலிக்க நான் தரணியில் அதிரவில்லே. மனுக்கால வெள்ளம் போச்சு, மார்க்ஸ் காலவெள்ளம் போகும் பூமித்தாய் கருனே வெள்ளம் எக்காலும் வடியாதோடும். இயற்கையின் ஓயாத் தானம் உயிர்களின் ஒழியா உழைப்பு செயற்கையின் சிலும்பவிடையே மனேயாக நிலைத்து நிற்கும். என்று தெரிவிக்கிருர் கவிஞர் காட்டு வாத்து கவிதையில்.

சென்றதுக்கு ஏக்கம் வளர்த்து, வருவதற்கு வாழ்த்து கூவி, முன்னேற்றம் காணும் விஞ்ஞான விந்தை என்று தடுமாறி, அநாவசியமான அலுவல்களில் ஈடுபடுவதஞல் இன்றைய வாழ்வுக்குப் பயன் எதுவும் ஏற்படாது என்று விளக்குகிறது அந்த நீண்ட கவிதை,

தன்னறிவுக்கும் மேலாக, தனி அறிவுக்கு அப்பாலும் தரணியையும் தராதலங்கள் அனைத்தினையும் உடலாக்கிப் புகுந்து, விஞ்ஞானிகளும் வியக்கும்படியாக விளையாடும் சக்தியை, உதிரத்தில் ஒன்றியதாய், உள்ளுக்குள் இருந்து கனத்திற்குக் கணம் வழிகாட்டும் உணர்வாய் உணர்ந்து விட்டால்,

முன்னும் இல்லே பின்னும் இல்லே