பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

கிருர், மார்க்ளியேக் கண்ளுேட்டத்துடனும் சமூகப் பார்வையோடும் கவிதை எழுத முன் வந்தவர்கள்கூட அனைத்து விஷயங்களையும் தங்கள் எழுத்துக்களால் தொட்டு விடவில்லை. குறிப்பிட்ட சில விஷயங்களிலேயே திரும்பத் திரும்ப வளையமிடுவதை தாமரை’க் கவிதைகள் நிரூபிக் கின்றன.

அமெரிக்க வெறுப்பு, சோவியத் ரஷ்யாவுக்குப் புகழாரம், வியத்நாமுக்கு வாழ்த்து, புரட்சிக்கு வரவேற்பு, ஏழை படும்பாடு, பணக்காரன் திமிர், நீக்ரோ பிரச்னே, முதலாளி (பண்ணையார்) காமவெறி, ஒடுக்கப்பட்டோ ருக்கு அனுதாபமும் ஆதரவும் போன்ற சில விஷயங்களையே இவர்கள் கவிதைப் பொருளாகக் கொண்டுள்ளனர். பங்களாதேஷ் பற்றியும் அநேகர் எழுதியிருக்கிருர்கள். மகாத்மாவை குறை கூறிக் கவிதை எழுதுவதிலும் சிலர் ஆர்வம் காட்டியுள்ளனர்.

இங்கும் ஒரு புரட்சி வந்தால் எல்லா நிலைமைகளும் சீர்திருந்திவிடும்; அப்படி ஒரு புரட்சி நிச்சயம் வரும் என்ற நப்பிக்கை முற்போக்குக் கவிஞர்கள் அனேவருக்கும் இருக் கிறது. அதனுல் செவ்வசந்தம் சிவப்பு மலர் பூக்கும் போன்ற வார்த்தைகளில் மோகம் கொண்டு இவர்களில் அநேகர் அவற்றை அளவுக்கு அதிகமாக அள்ளித் தெளித் திருக்கிருர்கள், தங்கள் கவிதைகளில்.

கருத்துக்களேவிட வார்த்தைகளுக்கு அதிகம் முக்கியத் துவம் கொடுப்பதஞல், இவர்கள் நீளம் நீளமான கவிதை களைப் படைக்கும் உற்சாகிகளாக விளங்குகிருர்கள். சிறுகதைகளுக்கு நீளமான தலைப்பு கொடுப்பது ஒரு ஃபாஷன் என்ற நிலை ஏற்பட்டது போல, கவிதைகளுக்கு நீள நீளத் தலைப்புகள் சூட்டுவதும் இவர்களிடையே ஒரு நியதிபோல் காணப்படுகிறது. -

மகாத்மாவை நோக்கி ஒரு சமூகஜீவியின் கேள்வி, இனிமேல் கிழக்கு எளிதிலே சிவக்கும், இங்கே இடி