பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ošū

கசடதபற முதல் ஏட்டில் பிரசுரமான அறிக்கையி விருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் இவை.

கசடதபற 1970 அக்டோபர் முதல் 1973 முடிய, மாசி கையாக வெளிவந்தது, 32 இதழ்கள் வந்துள்ளன. ஜூன் ஜூலை வெளியீடு ஆக ஒரு அறிவிப்பு பிரசுரித்து விட்டு, ககடதபற நின்றுவிட்டது.

இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளில் அது செய்த சாதனைகள், சோதனைகள் அது பெற்ற வெற்றிகள், தோல்விகள் - குறித்து ஆராய்வது என் நோக்கம் அல்ல. கசடதபறவில் வெளிவந்த கவிதைகள் மட்டுமே இங்கு எனது கவனிப்புக்கு இலக்காகின்றன

கவிதைகளே ஆராய்வதற்கு முன்பு முக்கியமாக ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டாக வேண்டும் 4-வது ஏட்டில் வெளிவந்துள்ள சார்வாகன் கட்டுரை புதுக் கவிதை' அருமையான எண்ணங்களே அழகாக எடுத்துச் சொல்கிறது. பெரிய அளவு (டிம்மி சைஸ்) கசடதபறவில் ஐந்து பக்கங்கள் வந்திருக்கிற அந்தக் கட்டுரை ஊன்றி உணர்வதற்குரிய சிந்தனைகளைத் தெளிவாகக் கூறுகிறது. அதை முழு ையாக மறு பிரசுரம் செய்வது சாத்தியமில்லை. எனினும் சில சிறப்பான, அழகான, கனமான சிந்தனைகளை எடுத்து எழுதாமல் மேலே செல்ல எனக்கு மனம் வரவில்லை .

  • கவிதை கனவு மாத்திரமல்ல. கனவுப் பார்வை மாத்திரமல்ல. கனவு காணும் மனசின் வாழ்வு. அவ் வாழ்வின் மொழிவழியொழுகும் வெளியீடு.

மனித ஜாதியின் வாழ்க்கை தனக்குத் தானே வகுத்துக் கொண்ட கட்டு திட்டங்களே மீறி அணையுடைத்து வெள்ளம் போலப் பெருகி ஓடிக்கொண்டு வருகிறது. மேலும் பெருக் கெடுத்தோடப் பார்க்கிறது. மனிதன் தனக்குள் தான் ஏற் படுத்தி வைத்துக்கொண்ட கட்டுப்பாடுகள், வழிவந்த மரபுகள் எல்லாம் ஒவ்வொன்ருகத் தகரத் தொடங்கியிருந் கின்றன. தன் சரித்திரத்திலேயே அனுபவித்தறியாத சுதந்திரத்தைப் பல்வேறு துறைகளில் தன் அறிவாலும்