பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269

மனச்சலனங்களைத் தான் அதிகமாகக் கவிதையாக்கியிருக் கிருர்,

காட்சி நிழல்கள்’ என்ருெரு கவிதை குறிப்பிடத்

தகுந்தது.

வெயிலும் நிழலும் கட்டிப் புரண்டு வானில் சிவக்கும் மாலையின் முத்தம், நீலக் காற்றில் கருப்புக் கோலம், கத்தும், கலையும் நீளப் பறக்கும். ஜோடிக் கால்கள் கனவைத் தேடி மணலைப் புரட்டும். பார்வையில் ஆடும் பச்சை இலைகள், பாளைகள் காற்றில் இச்சென்று மோதவும் திகைத்துப் பறக்கும் பெருக்கல் குறிகள். மனதில் ஆயிரம் இன்பக் குருவிகள்.

வைதீஸ்வரனின் குளம் என்ற-சற்று நீளமான-கவிதை படித்து ரசித்து அனுபவிக்கப்பட வேண்டிய நல்ல படைப்பு.

இரவு பகலாய்,

இரவும் பகலும் மாறி மாறிக் குளிக்கும் நீருக்குள் தவறிவிழும் விண்மீன்கள், ஜில்லென்ற சூரியன்கள், நீளும் கைகளே நிரந்தரமாய் ஏமாற்றி உள்மடங்கும் காலம், இருக்ளப்பிழிந்து ஊர்மேல் ஒளியுலர்த்தும் வேளே மீதி நிலவு.