பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

முன்னுரை

பிற்போக்குத் தத்துவங்களின் தாக்கம் (சர்ரியலிசம், எக்சிஸ்டென்ஷியலிசம், ஃபிராய்டிசம், நியோ ஃபிராய்டிசம்) குறைந்து, பொதுவான மார்க்சீயக் கொள்கையின் தாக்கம் மிகுந்துள்ளது.

இவை மேற்போக்காகப் புதுக்கவிதை இயக்கப் போக்குகளைக் கவனித்து வருபவர்களுக்குப் புலப்படாமல் போகாது. உலகமளாவிய மக்கள் இயக்கங்கள் கொடுமைகளையும் அடிமைத்தனத்தையும் நொறுக்கி வீழ்த்த முனைகின்றன. இவ் வியக்கங்களின் தாக்கம் இலக்கியத்தில் ஓர் எழுச்சியை ஏற் படுத்துகின்றது. சிந்தனைக் குழப்பங்கள், உணர்ச்சிக் குழப்பங் கன் குறைந்து, தெளிவான நீரோடைபோலப் புதுக்கவிதை செல்லுகிறது. சமூக ஆய்வின் அடிப்படையில் சமூக வர்க்கப் பிரிவுகளின்-உறவுகளின் மாற்றங்களால் சமூகத்தையே மாற்றுகிற மானுட சக்தியின் பெருமையைப் புதுக்கவிதை பறைசாற்றுகிறது. இது ஒரு பெரிய மாற்றம். இந்த வகையான மாற்றம்தான் வளருகிற மாற்றம். மற்றைய மாற்றங்கள் நிலையானதும் அல்ல; வளர்வனவும் அல்ல.

இப்போக்கில் முன்னேறிச் செல்லுகிற புதுக்கவிதை போட்டத்தை-புதிய புதிய உத்திகளாலும் கற்பனைகளாலும் நீரோட்டத்தை அழகுபடுத்தும் கவிஞர்களை நாம் நுணுகி ஆராய்ந்து மதிப்பிடுவோம். இப்பொழுது அதற்குரிய நேரமும் அவகாசமும் எனக்குக் கிடைக்கவில்லை. எனவே மீண்டுமொரு முறை இப்பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுகிறேன்.


கா. வானமாமலை
5)