பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதை-பழமையும் புதுமையும்

99

இலைகள் துளிர்த்துப் பசுமையாகி
பூக்கள் மறுபடியும் பூக்கும் அதே இனிய

வாசனையோடு

பூவைப்பற்றிப் பேசினாலும், வாழ்க்கையைத்தான் பேசுகிறார் என்பது கவிதையில் தெளிவாகிறது. காலம் தானே மாறும்; நாம் பொறுமையாயிருக்கவேண்டும்; எதுவும் நாமாக முயற்சி செய்ய வேண்டியதில்லை; கோபம் கூடாது. நீண்ட நாட் களாகச் சுரண்டல் வர்க்கங்களின் உபதேசியார்கள் துன்பக் கடலில் மிதக்கும் உழைக்கும் மக்களைப் பார்த்துச் சொல்லும் அறிவுரைகள்தாம் இவை!

பண்டைய ‘வள்ளல்’ மதிப்புகளை மாற்றும் ஒரு புதிய பாரியை நடக்க வைத்து, அவனது வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தி, புதிர் பாணியிலேயே, மரபுக்கு விரோதமான உள்ளடக்கம் கொடுத்து தலைப்பில்லாமல் ஒரு கவிதை எழுதியிருக்கிறார் ஒரு கவிஞர்:

நடந்தான் பாரி
நடந்தான் பாரி
நடந்த மக்களின்
தோள் மீதேறிய
சிவிகைச் செல்வர்
செலுத்திய வரியால்
உருவான தேரைக்
கொடிக்கு நிறுத்தி
முதல் தடவையாக
நடந்தான் பாரி.

பாரி சங்கப் புலவர்களால் பெரிதும் போற்றப்படுபவன், சமீப காலம்வரை தமிழ் நாட்டின் ஒரு சில அரசியல்வாதிகளும் தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றுபவர்களாகத் தம்பட்டம் கொட்டிக் கொண்டவர்களும் பாரியின் வள்ளல் பரம்பரையில் தாங்கள் வந்ததாகவும், அதுவே தமிழர் பரம்பரை என்றும் முழங்கி வந்தார்கள். பண்டைப் பாரியும் தேரைக் கொடி படர்வதற்காக விட்டுவிட்டு நடந்துபோய் புலவர் வாயால் புகழப் பெற்றான். இவன் இதற்கு முன் நடந்திராதவன். அவனைப் பற்றியதோர் புதிய மதிப்பை (value) இரண்டு செயல்களைக் குறிப்பிட்டுக் கவிஞர் ஏற்படுத்துகிறார். சங்க காலப் பாரிபற்றி வள்ளல் என்ற மதிப்பையே புலவர்கள் உருவாக்கியிருந்தனர். அந்தப் பாரியைப் பற்றிச் சமூக மானிடவியல்