பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

நா. வானமாமலை

கண்ணோட்டத்தில், பண்டைப் புலவர் காணாத சமுதாய உண்மையைப் புதுமைக் கவிஞர் காண்கிறார்:

நடத்த மக்களின்
தோள் மீதேறிய
சிவிகைச் செல்வர்
செலுத்திய வரியால்
உருவான தேரை

சிவிகைச் செல்வர் செலுத்திய வரியால் உருவானது தேர். இச் சிவிகைச் செல்வர் நடக்கிற மக்களின் தோள் மீது சவாரி செய்கிறார்கள்.

இது புதிர் கவிதை அமைப்புத்தான். உள்ளடக்கம் சமூக மானிடவியல், பொருளாதாரவியல், வரலாற்றியல் அறிவுகளையெல்லாம் குவித்து, பாரியின் பழைய சமூக மதிப்பை மாற்றி ஒரு புதிய சமூக மதிப்பை இக்கவிதை விளைவிக்கிறது.

பற

அறைக்குள்ளே வைத்த
கையகலக்கண்ணாடி கொத்தும்
சிறுகுருவி ஆகாமல்
அந்தரத்தில் பறக்கும்
விண்வெளி வீரனாய்
சத்திரனைக் கொத்து.

புதிர் கவிதையமைப்பில் வேறொரு கவிதை இது. புழுதியில் புரளாமல் மனத்தைச் சந்திரனுக்குப் போகச் சொல்லுகிறார் பாரதி. அதே கருத்தைப் பின்பற்றிப் புதிய படிமத்தைப் படைத்து, கையகலக் கண்ணாடியைக் கொத்தாமல், (பாரதி காலத்தில் தோன்றாத) விண்வெளி வீரனாய் சந்திரனைக் கொத்த ஏவுகிறார் கவிஞர். மிகவும் அற்பமான செயல் புரியும் மனிதன் மாபெரும் செயல்கள் செய்யும் மாமனிதனாக வளர வேண்டும் என்ற ஆர்வம் கவிதையில் வெளிப்படுகிறது.

நம்பிக்கை ஒளியைப் பரப்பும் ஒரு கவிதையை ‘துலாபாரம்’ என்னும் தலைப்பில் ஒரு கவிஞர் எழுதியுள்ளார்!

15

ஜன்னல்வழி புதுக்காற்று
ஓடையிலே புதுவெள்ளம்
இருள் குளித்தெழுந்து

சூர்யப் பொட்டிட்டுக் கொள்ள