பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

நா. வானமாமலை

தன்னைத்தானே விரும்புபவன் பிறரோடு பழகவும். கூடவும் விரும்பமாட்டான்.

ஒடியல் சிக்கல்: தாய் மீது அளவு மீறிய அன்பு, இதுவும் அடக்கப்படும் ஆசையால் வருவது.

ஹெர்குலீன் சிக்கல்: எல்லோரையும் அடக்கியாளும் ஆசை.

இவையெல்லாம் முரண்பாடுகளின் விளைவுகள்.

மனிதனுடைய மிக உயர்ந்த ஆர்வங்களெல்லாம் ‘இட்’ என்னும் உணர்ச்சி அடக்கப்படும்பொழுது வேறு வழிகளில் வெளியாவதே அடக்கப்பட்ட Id. கடவுள் பக்தியாகவோ, தேசபக்தியாகவோ, மனிதாபிமானமாகவோ வெளிப்படலாம். இதனை Sub limation என்று ஃபிராய்டு கூறுவார்.

தான் விரும்பும் பெண் தன்னைத் தகுதியில்லாதவனென்று கருதினால் அடக்கப்பட்ட ஆசை ‘தாழ்வுச் சிக்கலாக’ ஆழ் உணர்வில் சென்று ஒளிந்துகொள்கிறது. இவர்கள் முயன்றால் பல துறைகளில் முன் வந்து தங்கள் தகுதியை வெளிப்படுத்துவார்கள். அப்பொழுது உயர்வுச் சிக்கல் (Superiority Complex), ஏற்படும்.

சிக்கல்கள் தீர அவற்றை உணர்வுநிலைக்குக் கொண்டுவர வேண்டும். இம்முயற்சியே ஃபிராய்டின் சிகிச்சை முறை. இதனை லைக்கோ அனலிஸிஸ் என்று ஃபிராய்டு அழைக்கிறார்.

ஆழ் உணர்விலுள்ள ‘சிக்கல்களை’ அறிந்து அவற்றை உணர்வுநிலைக்குக் கொண்டுவர, கனவுகள், பேச்சில் தவறுகள், பதற்றங்கள் முதலியவற்றைக் கேள்விகள் கேட்டு அறிய வேண்டும். காரணம் அது தடைப்பட்ட உணர்ச்சியாக இருக்கும். அதனை அறிந்தால் அதை மாற்றுருவமாக்க (Sub limate) வழி கூறவேண்டும்.

நரம்பு நோயாளிகள், ஹிஸ்டீரியா நோயாளிகள், உள்ளத் திரிபுடையவர்களுக்கு இவ்விதிகள் பொருந்துமென ஃபிராய்டு முதலில் கருதினார். ஆனால் கடைசிக் காலத்தில், இக்கொள்கையை எல்லா மனிதர்களுக்கும் சமூக நிகழ்ச்சிகளுக்கும் சமூக வரலாற்றிற்கும் பொருத்தி விளக்கம் கூறத் தொடங்கினார். இதனைப் பின்பற்றிப் பல எழுத்தாளர்கள் மனிதனது நடத்தையையும் அக இயக்கத்தையும் விளக்கத் தொடங்கினர். இக்கொள்கையின் தோற்றத்திற்குச் சமூகச் சூழல் எது?

ஃபிராய்டு ஏகபோகங்கள் வளர்ச்சியுற்ற காலத்தில் வாழ்ந்தார். ஏகபோக வளர்ச்சிப் போக்கில், சிறு முதலாளிகள் அழிந்தனர். நடுத்தர வர்க்கம் சீர்குலைந்தது. இவர்கள் அழிவு அபாயத்தை எண்ணி நடுங்கினர். இவர்கள் யாவரும் தனிமனித