பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

நா. வானமாமலை


ஆம்! இவர்கள்தான் தங்களைத் தாங்களே காதலித்தவர்கள். பிறரைக் காதலிக்கத் தெரியாதவர்கள். இன்று இவர்களுக்கு பிறர் அனுதாபம் தேவையாம். மனிதர் கூட்டத்தை மந்தையென்று கேலி செய்தவர்களுக்கு இம்மந்தையின் இரக்கம் வேண்டுமாம்!

சிறு முதலாளிகள், நடுத்தர வர்க்கத்தினர், அறிவாளிகள் நிலை இதுவாக, பெருமுதலாளிகள், தமக்கெதிராகத் திரண்டு வரும் மக்கள் கூட்டத்தையும் அதன் தலைமையில் நிற்கும் தொழிலாளி வர்க்கத்தையும் கண்டு அஞ்சி நடுங்கிப் புலம்பினர். தைரியமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காகப் போலி வீரவாசகங்கள் பேசினர். அதனோடு தம்மைப் பாதுகாத்துக் கொள்பவர்களையும் திரட்டிக்கொண்டனர்.

ஏகபோகங்கள் வளர்ச்சியுற்று, மேல்தர வர்க்கங்களின் மக்கள் உள்ளத்தில் பயமும் உறுதித் தளர்ச்சியும் ஏற்பட்ட காலத்தில், நரம்பு வியாதிகளும் சித்தக் கோளாறுகளும் அதிகப்பட்டன.

தனிமனிதம் (Individualism) என்ற கொள்கையில் ஊறிய ஃபிராய்டு, சமூகத்திலிருந்தும், உற்பத்தி வளர்ச்சிப் போக்குகள் தோற்றுவித்த மனித உறவு நிலைகளினின்றும் மனிதனைப் பிரித்து, மனிதனுடைய உள்ளத்தைத் தோண்டிப் பார்த்தது இயற்கைதான்.

விஞ்ஞானத்திற்குப் பொதுவான விதிகளையும் ஆய்வு முறைகளையும் கைவிட்டு, அகவயமான கற்பனை முறைகனைக் கையாண்டு கொள்கைகளை உருவாக்கினார்.

சமூக இயலுக்கும் வரலாற்றிற்கும் இக்கொள்கையை அடிப்படையாகக் கொள்ளும் பொழுது, சமூகத்தை ஒதுக்கி, தனி மனித நடத்தையை ‘காம்ப்ளெக்ஸ்’ அடிப்படையில் ஆராய்வதாகச் சுருங்கிவிடும். இக்கொள்கையின்படி மனித இயக்கமும் சமூக இயக்கமும் அடக்கப்பட்ட ஆசைகளின் தொகுப்பான ‘ஆழ் உணர்வின்’ லீலைகளே.

இக்கொள்கையில் மனித நடத்தைக்கெல்லாம் காரணம். ‘ஆழ் உணர்வு’ அல்லது Sexual energy என்பதற்குப் பெரும் எதிர்ப்புத் தோன்றிய பின் ஃபிராய்டின் சீடர்கள் அடிப்படை அதுவாயினும், அவ்வுணர்ச்சிக்குப் பல லாய்க்கால்கள் உண்டென்றும், ‘அறிவு ஆசை, ஆதிக்க ஆசை’ முதலியன அதில் சேர்க்கப்பட வேண்டுமெனவும் கூறினர். இவருடைய முக்கிய சீடர்கள் ஆட்லர், ஜங் முதலியவர்கள் நவீன ஃபிராய்டிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஒப்புக்கொண்டே இன்ப நுகர்வு ஆசை, இணைவிழைச்சு (Sex) மட்டுமல்ல வென்றும் பிற ஆசை