பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

நா. வானமாமலை

முறையில், சமுதாய இயக்கங்களோடு பொருத்திப் பார்க்க இவை ஒவ்வொன்றும் சமுதாய வரலாற்றில் எந்நிலையில் தோன்றியது, வரலாற்றை ஒட்டி எவ்வாறு வளர்ச்சி பெற்றது, வளர்ச்சி பெற்றபின் சமுதாய மாற்றப் போக்குகள் இவற்றை எவ்வாறு பாதித்தன என்பதை நாம் அறிந்கொண்டால்தான் இக்கொள்கைகளைத் தவறில்லாமல் நாம் அளவுகோல்களாக இலக்கியப் படைப்புகளை மதிப்பிடப் பயன்படுத்தமுடியும்.

எனவே, மனிதநேசம் (Humanism), போர்க்குணம் மிக்க மனிதாபிமானம் (Revolutionary humanism), கற்பனாவாதம் (Romanticism), புரட்சிகரமான கற்பனாவாதம் (Revolutionary Romanticism), யதார்த்தவாதம் (Realism), விமர்சன யதார்த்த வாதம் (Critical realism), சோசலிஸ்டு யதார்த்தவாதம் (Socialist realism) ஆகிய கலைப்படைப்புக் கொள்கைகளின் வரலாற்று ரீதியான தோற்றத்தையும் வளர்ச்சியையும் மாறுதல்களையும் சுருக்கமாகச் சுட்டிக்காட்டுவது அவசியம் என்று தோன்றுகிறது.

இக்கொள்கைகளுள் மனிதநேசம் காலத்தால் முந்தியது. இது 13, 14ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கத்தோடு தோன்றியது. அக்காலத்தில் சீர்குலைந்து வந்த நிலவுடைமைச் சமுதாயத்தை எதிர்த்துப் புதிதாக உருவாகி வந்த முதலாளி வர்க்கம் போராடத் தொடங்கியது. மனித நேசத்தின் அடிப்படை அம்சங்கள், நிலப்பிரபுத்துவத்தை ஆதரித்த சமய, சமூகக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக இருந்தது. ‘தனிமனித உரிமை’ என்ற போர்வையில் நிலவுடைமை முறையை ஆதரித்த கொள்கையையும், ‘அரசுரிமையின் தெய்வீகத் தன்மை’ என்ற கொள்கையையும் மனிதநேசக் கோள்கையுடைய எழுத்தாளர்கள் எதிர்த்தனர். சமயவரம்பிற்குள்வே மனிதநேசத்தை வலியுறுத்தியவர்கள் இக்கொள்கையினரில் ஒரு பிரிவினர். சமயத்தையே எதிர்த்து உலகாயதத்தைப் பிரசாரம் செய்தவர்கள் இன்னொரு பிரிவினர். ஆயினும் அவர்களுக்குப் பொதுவான சில அம்சங்கள் இருந்தன. அவை உலக மறுப்பையும் துறவையும் எதிர்ப்பது, மனிதனது இன்பம் நாடும் உரிமையை ஆதரிப்பது, தெய்வீக ஆதிக்கத்திற்கும் மன்னனது அதிகாரத்திற்கும் எதிராகத் தனி மனிதனது உரிமைகளை வற்புறுத்துவது முதலியன. இக்கருத்துக்கள் சுரண்டலுக்கும் ஊழலுக்கும் எதிராக மக்கள் நடத்திய போராட்டங்களில் உருவாயின. மனிதன் மீது இரக்கம், அவனது வாழ்க்கையில் அக்கரை, அவன்மீது ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் மீது வெறுப்பு, அவனது சுதந்திரத்தில் பற்று