பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தற்கால இலக்கியப்
படைப்புக் கொள்கைகள்

சிலவற்றின் தோற்றமும் வளர்ச்சியும்

‘தாமரை சிறுகதை மலர்’ மனிதனுக்கும் தற்காலச் சமுதாயத்திற்கும் உள்ள உறவுகளை யதார்த்தபூர்வமாகச் சித்தரிக்கிற கதைகளை வாசகர்களுக்கு அளித்திருக்கிறது. இது முற்போக்கு எழுத்தாளர்களும் வாசகர்களும் வரவேற்க வேண்டியதோள் முயற்சி என்பதில் சந்தேகமில்லை. இம்மலரிலுள்ள பல கதைகள் முற்போக்கான இலக்கியப் படைப்புக் கொள்கைகளுக்குச் சிறந்த வெற்றியாகும்.

‘தாமரை’ செப்டம்பர் இதழில் இம்மலரைப் பற்றிய சில விமர்சனக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவ்விமர்சனங்களில் எழுத்தாளர்கள் மனிதநேசம், யதார்த்தவாதம், விமர்சன யதார்த்தவாதம், சோசலிஸ்டு யதார்த்தவாதம் என்ற கலைப் படைப்புக் கொள்கைகளை உரைகற்களாகக்கொண்டு கதைகளை மதிப்பீடு செய்திருக்கிறார்கள். ஆனால் இக்கொள்கைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கூறியிருக்கிறார்கள். ஒரு நண்பர் எல்லாக் கதைகளும் மனிதநேச அடிப்படையில் எழுந்தவை என்று கூறுகிறார். மற்றொரு நண்பர், சில மனிதநேச உள்ளடக்கமும், வேறுசில போர்க்குணம் மிக்க மனிதநேச உள்ளடக்கமும், ஒரு கதை சோசலிச ரியலிஸ்டு உள்ளடக்கமும் கொண்டவை என்று வகைப்படுத்திக் காட்டுகிறார். மூன்றாமவர் எல்லாக் கதைகளும் சோசலிஸ்டு யதார்த்தவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறி, அவற்றில் சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுகிறார்.

இவ்விமர்சனங்களிலிருந்து, இவ்வெழுத்தாளர்களுக்குத் தாம் கையாளும் அளவுகோல்களைப் பற்றியே வேறுபட்ட கருத்துக்கள் இருப்பதை நாம் தெரிந்துகொள்ளுகிறோம்.

இப்படைப்புக் கொள்கைகள் திடீரென்று தோன்றியவையல்ல. யார் மூளையிலோ பளிச்சிட்டு வெளிபடுத்தப்பட்டவையல்ல. சமுதாய வரலாற்றுப்போக்கில், இலக்கியப் படைப்புக்களில் தர்க்க ரீதியாக, இயல்பாக எழுந்தவை. இக்கொள்கையை நிலையியல் ரீதியாக அறிந்துகொள்ளாமல், இயங்கியல்