பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

நா. வானமாமலை

லாளித்துவ வர்க்கம், மக்களைத் தனது தத்துவக் கருத்துகளால் கவர்ந்துகொண்டதுமேயாகும். முதலாளித்துவப் புரட்சிச் சிந்தனையாளர்கள் ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற கோஷங்களை எழுப்பினர். ஆயினும் இந்தத் தத்துவவாதிகள் இக்கோஷங்களைப் பொதுப்படையாகக் கூறினரேயன்றி உழைக்கும் மக்களுக்கு இக்கோஷங்கள் பொருந்தும் என்று கருதவேயில்லை. அவர்களைக் கவர்ந்துகொள்ளும் முறையில் இக்கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களுடைய மனிதநேசத்திற்கு அடிப்படை, தங்கள் வர்க்கத்திற்குத் தனிச் சொத்துரிமை வேண்டும் என்ற ஆசையே, ‘மக்கள் சுதந்திரம்’ என்ற கருத்தை இவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தனி மனித சுதந்திரத்தையே முதன்மையானதாகக் கருதினார்.

தமிழ்நாட்டிலும், மனிதநேசப்போக்கு சங்ககால முதலே தோன்றி வரலாற்று ரீதியாக வளர்ந்துள்ளது. இப்பொருள் பற்றி விரிவாக ஆராயவேண்டியது அவசியம். சமயவாதிகளில் சிலர் சமய வரம்பினுள், மனிதநேசத்தை வலியுறுத்தினர். உதாரணமாக மணிமேகலையாசிரியர் சாத்தனார், “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று கூறி எல்லா மக்களுக்கும் உணவளித்தல் அவசியம் என்ற மனித நேசக் கருத்தைக் கூறுகிறார். பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வைதிகக் கருத்துக்களை ஆபுத்திரனது கூற்றுகளின் எதிர்க்கிறார். நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு அம்சங்கள் இக்கருத்துக்களில் உள்ளன. ஆனால், உலக மறுப்பும் துறவும் இக்காவியத்தின் அடிப்படைக் கருத்துக்கள். சமயக் கட்டுக் கோப்பினுள் நின்று மனிதநேசத்தைப் போற்றும் போக்கில் இம்முரண்பாடு தவிர்க்க முடியாதது. சமய வரம்புகளை மீறிச் சிலப்பதிகாரமும் குறளும் பல மனிதநேசக் கருத்துக்களைக் கூறுகின்றன. கம்பன் மனிதநேசக் கருத்துக்களைக் கூறும் கவிஞர்களுள் தலைசிறந்தவன். மனிதனது காம்பீரியத்தை அவன் தன் காப்பியப் பாத்திரங்களின் மூலம் படைத்துக்காட்டுகிறான். சிறந்த மனிதன் உருவாவதற்குத் தேவையான ஒரு கற்பனைச் சமுதாயத்தையும் அவன் உருவாக்கிக் காட்டுகிறான். நமது இலக்கியப் பாரம்பரியம் முழுவதிலும் இழையோடிக் கிடக்கும் மனிதநேசக் கருத்துக்களையும், அவை சமுதாய வளர்ச்சிப் போக்கில் வேர்விட்டு வளர்ச்சி பெற்ற முறைமையினையும் முற்போக்கு எழுத்தாளர்கள் ஆராய்ந்து போற்றி வளர்த்தல் வேண்டும்.

பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நிலவுடைமையை எதிர்த்த முதலாளித்துவம் அரசியல் ஆதிக்கம் க்கும்