பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தற்கால இலக்கியப் படைப்புக் கொள்கைகள்

27

மகிழ்விக்க ஆரியக் கூத்தாடினார்கள். இவ்வகை எழுத்தாளர்கள் வில்கிகாலின்ஸ், மாரியட், ஜிரோம் முதலியவர்கள். இவர்கள் முதலாளிகளின் நல்ல பிள்ளைகள். ஆனால் மட்டமான கலைஞர்கள்.

அடுத்த வகையினர் சிறந்த கலைஞர்கள். மனச்சாட்சியுடையவர்கள். இவர்கள் தங்கள் வர்க்கத்தை விட்டு விலகி வந்து அதன் கோர உருவத்தை உண்மையாக வரைந்து காட்டினார்கள். முதலாளித்துவத்தின் விளைவுகளான வறுமையையும் வேலையின்மையையும் இரக்கமின்மையையும் சித்தரித்தார்கள். மக்களுக்கு முதலாளித்துவம் இழைக்கும் கொடுமைகளையும் தீமைகளையும் சுட்டிக்காட்டினார்கள். டால்ஸ்டாய், டிக்கன்ஸ், பெர்னார்டு ஷா, ரோமெய்ன் ரோலந்து, ஹோவர்டு பாஸ்ட், ஹைய்ன்ரிஷ் முதலியவர்கள் இத்தகைய போக்கைப் பிரதிபலித்தார்கள். இவர்களது படைப்பு முறையை விமர்சன யதார்த்தவாதம் என்றழைக்கிறோம். இவர்களில் எல்லோருடைய எழுத்திலும் புரட்சிகரமான மனிதநேசம் இழையோடு கிறது. ஆனால் இடையிடையே இவர்களிடம் கற்பனைவாதமும் காணப்படுகிறது. சமுதாய உண்மைகளைக் கண்டறியும் திறனும் கலைப்படைப்பு உத்தியும் இவர்களிடம் சிறந்து தோன்றுகின்றன.

இவர்களது இலக்கியக் கொள்கைகள், சமுதாயத்தின் சில தீங்குகளை அரைகுறைச் சித்திரமாகத் தீட்டிய ஸ்டீல் அடிசன் ஸ்விப்ட், சால்டிகாவ் ஷெட்ரின் முதலியோருடைய யதார்த்த வாத வழிவந்ததெனினும் இவர்கள் பகுதிச் சித்திரங்களோடு நின்றுவிடாமல் தீமைகளின் சமூக வேர்களைக் கண்டு விளக்க முயன்றுள்ளார்கள். இவர்களது முன்னோடிகளைத்தான் யதார்த்தவாதிகள் (Realists) என்று அழைக்கிறோம்.

இந்தப் போக்குகள் அனைத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியாக, வரலாற்று ரீதியான சமூக முரண்பாடுகளின் முதிர்ச்சி யால், முற்போக்கு வர்க்கங்களில் வேர்கொண்டு எழுந்த இலக்கியக் கொள்கை (சோசலிஸ்டு ரியலிசம்) சோசலிஸ்டு யதார்த்தவாதமாகும். இக்காலத்தில் தொழிலாளி வர்க்கம் சமுதாயப் புரட்சியின் முன்னணியாக அனுபவமும் தத்துவப் பயிற்சியும் பெற்று முன்னேறத் தொடங்கியது. பல சமூக வர்க்கங்கள் அதனைப் பின்பற்றிப் புரட்சிப் போரில் அணிவகுத் தன. ஏகாதிபத்தியமாக வளர்ந்துவிட்ட முதலாளித்துவத்தை எதிர்த்து அதனால் பாதிக்கப்பட்ட பல உலக சக்திகள் (தொழிலாளி வர்க்கம், விவசாயி வர்க்கம், நடுத்தர வர்க்கம், அடிமை நாட்டு மக்கள், போரை எதிர்த்துச் சமாதானத்திற்காகப் போராடும் மக்கள்) தனித்தனியாகவும் ஒன்றுபட்டும் போரா-