பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

நா. வானமாமலை

உலகப்போருக்கு முன் முதலாளித்துவப் போட்டியும் ஏகபோக வளர்ச்சியும் அதற்கு முன்னர் என்றுமிராத அளவு வளர்ச்சி பெற்றன. உலகத்தைப் பங்குபோட்டுக் கொள்வதற்கான போர் தொடங்கும் நிலை வளர்ந்தது. கற்பனைவாதிகளின் கற்பனைகள் நொறுங்கின. அவர்கள் கற்பனைக்கெட்டிய 'பொற்காலமும்' 'இளைய உலகமும்' எட்டாக்கனவுகளாகவே நின்றன. ஏகபோகங்கள் மக்களின் உதிரத்தை உறிஞ்சிப் பேயாட்டம் ஆடின.

இக்காலத்தின் எழுத்தாளர்களில் பலர் தம் மனச்சாட்சியை ஏகபோகச் சுரண்டல் முதலாளிகளுக்கு விற்றுவிட்டனர்.இவர்களுக்கு ஃபோர்டு போன்ற முதலாளிகள் உலக ரட்சகர்களாகத் தோன்றினர். பணம் சுருட்டத் தெரிந்தவர்கள், பகல் கொள்ளைக்காரர்கள், ஏகாதிபத்தியவாதிகளனைவரும் கதா நாயகர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள். ஆப்பிரிக்காவில் நீக்ரோக்களைப் பிடித்து அடிமைகளாக விற்பதற்காகக் காட்டினுள் வழி கண்டுபிடித்துக் கிராமங்கள் இருக்குமிடம் காட்டிய செஸில் ரோட்ஸ் என்பவனைப் பனாமாவைக் கண்டு பிடித்த 'கார்டேஸ்' என்ற பூகோளப் புதுமை கண்டவனுக்குச் சமமாகப் புகழ்ந்தார்கள்.

முதலாளித்துவ முற்கால உலகத்தில் ஆதிக்கம் செலுத்திய பதினான்காவது லூயி, பயங்கர இவான், தாமர்லேன்,செங்கிஸ்கான் போன்ற கொடுங்கோலர்களைத் தாக்கிச் சித்திரம் தீட்டிய முதலாளித்துவ எழுத்தாளர்கள், தங்கள் காலத்துப் பகற்கொள்ளைக்காரர்களான எண்ணெய் முதலாளி களைப்பற்றியோ இரும்பு முதலாளிகளைப்பற்றியோ, யுத்ததளவாட உற்பத்தி முதலாளிகளைப்பற்றியோ எவ்விதச் சித்திரத்தையும் தீட்டவில்லை. இவர்களை விட்டுவிட்டால் முதலாளித்துவப் பண்பாட்டின் படைப்பாளிகளான விஞ்ஞானிகள், புதுமை புனைபவர்கள், கலைஞர்கள், படைவீரர்கள் ஆகியோரைப் பற்றியாவது எழுதினார்களா? இல்லவே இல்லை. அவர்களால் ஏன் முதலாளித்துவச் சமுதாயத்தின் மேன்மை களைப் பற்றி எழுதமுடியவில்லை?

முதலாளித்துவச் சமுதாயத்தில் இவர்களது புரவலர்கள் முதலாளிகள், அவர்களைச் சிறந்த மனிதர்களாகவோ வீரர்களாகவோ காண்பது வேடிக்கைக்குக் கூடப் பொருத்தமாகத் தெரியவில்லை.அவர்களது பகல் கொள்ளைகளைப் பற்றி எழுத இவ்வெழுத்தாளர்களது நன்றியுணர்வு இடம் தர வில்லை.இவர்கள் இருபிரிவாகப் பிரிந்தார்கள். முதல் பிரிவினர் மனச்சாட்சியின் உறுத்தலே இல்லாதவர்கள்; முதலாளித்துவத்திற்குத் துதி பாடினார்கள். தங்கள் எஜமானர்களை