பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தற்கால இலக்கியப் படைப்புக் கொள்கைகள்

25

னான். இளமையிலேயே கடவுளை எதிர்த்து ‘நாத்திகத்தின் இன்றியமையாத் தேவை’ (The necessity of atheism) என்ற பிரசுரம் ஒன்றை வெளியிட்டதற்காக அவன் பல்கலைக்கழகத் தினின்று வெளியேற்றப்பட்டான். அடிமைகளாக வயல்களில் உழைப்பவர்களை நோக்கி, “கலப்பைக் கொழுவை உருக்கி வாளாக வார்த்து உங்களை அடக்கி ஆள்வோர்மீது போர் தொடுங்கள்” என்று முழங்கினான். ஆனால் அவனது லட்சிய சமுதாயம் பொற்காலம் (Golden age). இதில் நம்பிக்கை தளரும் போதெல்லாம் சோகக் கவியாக மாறுகிறான். பைரன் பழமையான விவாக பந்தங்களை முறித்தவன், இச்சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை எவ்வகையிலும் மீறவேண்டும் என்று நினைத்துக் கண்டவரைக் காதலிக்கும் டான்ஜுவானைப் பாத்திரமாகப் படைத்தான். கிரீஸில் நடைபெற்ற விடுதலைப் போரில் தனது நாட்டு அரசாங்கத்திற்கு எதிராகக் கிரேக்க மக்களோடு சேர்ந்து நின்று போராடினான். பல நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிப் பாடினான். மக்கள் மறந்துபோய்விட்ட அயல்நாட்டுத் தேசிய வீரர்களின் வரலாறுகளின் உயிர்ப்பித்து அவர்களுடைய பாத்திரங்களைக் கவிதையில் படைத்தான். இத்தகைய பாத்திரங்களுள் ஒன்று ‘சில்லான் கைதி’ (Prisoner of Chillion). மக்களுக்காகவோ, அயல்நாட்டு ஆக்கிரமிப்பையோ, அடிமைத் தனத்தையோ எதிர்த்துப் போராடுபவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களையெல்லாம் பைரன் போற்றிப் பாடினான்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை, தான் ஆங்கிலேயனாக இருந்த போதிலும் அவன் புகழ்ந்து பாடவில்லை. உலகத்தின் எதிரியாகவே கண்டான். ஏகாதிபத்தியத்தைப் புகழ்ந்து பாடும் கூலிக் கவிஞர்கள் அவனைத் தேசத்துரோகி என்றனர். உலக மக்களை அடிமைத்தனத்தில் ஆழ்த்தும் தனது நாட்டு ஏகாதி பத்தியத்தின் விரோதியாக இருப்பதே தனது மனிதநேசக் கொள்கைக்குரிய தருமம் என்று அவன் பதில் கூறினான்.

விக்தர் ஹியூகோ சிறந்த மனிதாபிமானி. பல வர்க்கங்களின் பிரதிநிதிகளையும் கற்பனை ரீதியான மனிதாபிமானத் தோடு சித்தரிக்கிறான். ‘லாமிஸரபிளா’, ‘சிரிக்கும் மனிதன்’, ‘நோட்டர்டேம்’ முதலியவை அவனது பெயர் பெற்ற நாவல்கள். அரசியல் புரட்சிவாதிகளும் அவனது படைப்புகளில் இடம் பெறுகிறார்கள். ‘சாகப் போகிறவனின் கடைசிக் காலம்’ என்ற நாவலில் இத்தகைய ஒருவனது நேர்மையையும், உறுதியையும் இலட்சியப் பிடிப்பையும் சித்தரிக்கிறான்.

இப் புரட்சிகரமான கற்பனைவாதம் பத்தொன்பதாம். நூற்றாண்டின் முடிவிலேயே கலைந்துபோய்விட்டது. முதல்

7/3