பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தற்கால இலக்கியப் படைப்புக் கொள்கைகள்

29

உலகத் தொழிலாளி வர்க்கத்தோடு இணைந்து நிற்பவர்கள். அதாவது சர்வ தேசியச் சகோதரப் பார்வையுடையவர்கள்.

வரலாற்று வழியாக உலக மக்களுக்குச் சுரண்டலிலிருந்து சுதந்திரமும் நல்வாழ்வும் வருங்காலத்தில் உண்டு என்ற நம்பிக்கையும், அதற்காகத் தாமே போராடவேண்டும் என்ற உறுதியும் உடையவர்கள்.

தனி மனித உணர்வையும் (individualism) அகவய மன உளைச்சல்களையும் போற்றும் இலக்கியப் போக்குகளை இவர்கள் நிராகரித்து முறியடித்துப் போராடுகிறார்கள்.

சோசலிச யதார்த்தவாத முறை, இயற்கையோடும் சமுதாயத்தோடும் மனிதனுக்கு உள்ள தொடர்புகளை முழுமை யாக அறிந்து சித்தரிக்கிறது. மனிதனது துன்பங்களை உணர்ந்து கண்ணிர் விடுவதோடு நின்றுவிடாமல் அவற்றைப் போக்க மக்கள் போராடுகிறபொழுது அவர்களுக்கு உற்சாக மளிக்கிறது. சமூக அநீதிகளையும் அவற்றிற்குக் காரணமான மனிதனை மனிதன் சுரண்டும் நிலைமையையும் விளக்கி அவற்றை ஒழித்துச் சோசலிச சமுதாயத்தை அமைக்கமுடியும் என்ற நம்பிக்கையை இவர்களது படைப்புகள் மக்களுக்கு ஊட்டுகின்றன. இக்கொள்கை பல்வேறு இலக்கியக்கொள்கை களையுடைய எழுத்தாளர்களைக் கவர்ந்து தன் வசப்படுத்தி வருகிறது. வருங்காலம் சோசலிஸ்ட் யதார்த்தவாதத்திற்கே என்பதில் ஐயமில்லை.