பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

33

வில்லை. இருதலைக் கொள்ளி எறும்பாக அவர்கள் தவித்தார்கள். இத்தவிப்பில் அவர்கள் ஓலமிட்டார்கள். “தனிமனிதச் சுதந்திரம் இல்லையே, சமுதாய்மே எனக்கு விரோதி” என்று கூவினார்கள். பலருக்கு நரம்பு அதிர்ச்சியும் சித்தப்பிரமையும் உண்டாயின. அவர்களைப் பரிசோதித்தவர்தான் ஃபிராய்ட். அவர்களுடைய தவிப்புக்குக் காரணம் கண்டுபிடிக்க முயன்றவர்தான் ஃபிராய்டு.

இந்நிலையை மாக்சிம் கார்க்கி கீழ்வருமாறு வருணிக்கிறார்:

நமது அறிவாளிகளது, ‘தனி மனிதச் சுதந்திர உணர்வு’ சித்தப் பிரமைக்கும் அகவய உளைச்சல்களுக்கும் அவர்களை ஆளாக்கியது. இவ்வாறு ‘தனி மனிதம்’ என்ற கொள்கையுடையவர்களது உள்ளம் ஒடிந்து மனம் குழம்பி, உயர்வு எண்ணங்கள் குன்றி அவர்கள் படுகுழிக்குள் வீழ்ந்துவிட்டனர். இவர்கள் மனநோயால் பீடிக்கப்பட்டு உளறுகிறார்கள். தங்கள் மீது இரக்கம் கொள்ள வேண்டும் என்று கதறுகிறார்கள்.

பிறரைப் பற்றிக் கவலைப்படாதவர்களும், மனித ஒற்றுமையிலும் மனிதாபிமானத்திலும் அக்கரையில்லாதவர்களுமான இவர்கள் மனிதர்களின் அனுதாபத்திற்காகக் கூக்குரலிட்டு அழுகிறார்கள். மனித குலத்தை மந்தையென்று எண்ணியவர்களுக்கு அம்மந்தையின் இரக்கம் எதற்கு?

இந்த மூலத் தத்துவத்திலிருந்து காலப்போக்குக்கு ஏற்ற சில மாறுதல்களோடு கிளைத்து எழுந்தவைதான் சர்ரியலிசம், எக்சிஸ்டென்ஷியலிசம் என்ற தத்துவங்கள்.

சர்ரியலிஸ்டுகளுக்குப் பிடித்த இலக்கியக் கருக்கள், பயங்கரக் கனவுகள், உருவொளித் தோற்றங்கள் (hallucinations), பயங்கர மனோவிகாரங்கள் முதலியன ஆகும். கவிதையின் இக்கிளையின் முதல்வர் டி. எஸ். எலியட் என்பவர். நமது புதுக்கவிஞர்களது பிதாமகர். இவர் தமது ‘பாழ்நிலம்’ என்ற கவிதையில் இரண்டாம் உலகப் போருக்குப் பிற்கால உலகைப் பயங்கரக் கள்ளிக் காடாகச் சித்தரிக்கிறார். மனிதன் உருப்படமுடியாத பிராணி, இவன் விலங்கிலும் தாழ்ந்த நிலைக்குச் செல்லுகிறான் என்று அக்கவிதையில் மனிதனது விதியை நிர்ணயித்துவிடுகிறார்.

‘கட்டுப்பாடில்லாத தனி மனித சுதந்திரமே மனித வாழ்க்கையின் குறிக்கோள்’ என்பது இவர்கள் சுதந்திரக்கொள்கை.

இக்கொள்கைகளை மனத்தில் கொண்டு நமது புதுக் கவிஞர்களது கவிதைகளை ஆராய்வோம். இவர்களது கவிதை