பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

நா. வானமாமலை

களின் உள்ளடக்கத்தைப் பின்வருமாறு பிரிக்கலாம். மேற்கூறிய விளக்கத்தின் அடிப்படையில் சாவும் வாழ்வும் இவர்களது முக்கியமான கருப்பொருள்கள். வாழ்க்கையின் உந்து சக்தி உணர்விற்கப்பாற்பட்ட அன்கான்ஷியஸ் உணர்வு, ஒரு தாரை போன்றது (Steam of conscious). அதன் ஊற்று அன்கான்ஷியஸ், அதிலுள்ளவை அடக்கப்பட்ட இன்ப நாட்டங்கள். அவை இணை விழைச்சுத் தன்மையுடையவை. இவர்களுக்கு மனித வாழ்க்கைப் போக்குப் பற்றியும் பெண்மை பற்றியும், கோட்பாடு ரீதியான கருத்துக்கள் உண்டு. எனவே பின்வரும் தலைப்புகளில் அவர்களது கருவையும், அதுபற்றி அவர்களது சித்திரங்களையும் படிமங்களையும் ஆராயலாம்.

1 வாழ்க்கை 2 சாவு 3 இணைவிழைச்சுணர்வு (Sex) 4 நிராசை (Frustration) 5 தனி மனிதம் (Individualism) 6 உணர்வுத்தாரை (Stream of consciousness) 7 கவிஞன் தொழில் 8 எழுத்தாளன் தொழில் 9 கோரமான உவமை படிமம், உருவகம் 10 கூடார்த்தம் (Obscurity) ஆகியவை.

இவ்வாறு வகைப்படுத்திக் கொண்டு ஆராய்ந்தால் புதுக் கவிஞர்களது தத்துவப் போக்கின் முழு உருவத்தையும் நாம் அறியலாம். அவற்றை மேற்குறித்த வரிசையில் ஆராயாமல் தர்க்க ரீதியாகத் தொடர்புடையவற்றை முன்பின்னாகவே ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளுவோம்.

வாழ்க்கை

பெனடிக்ட் இவ்வாறு கேள்வி கேட்கிறார்:

வருகையின் நினைவில்
நிகழ்வைக் கழித்து
கழிவது கனவாய்
வருவது நினைவாய்
நினைவும் சுவடாய்
முடிவை அடைதல்
கனவின் முடிவா?

வாழ்வுள் கனவா?

கவிஞனின் வேலை கேள்வி கேட்பதுதான் போலும், வாசகன், வாழ்க்கையின் தத்துவத்தை அவனுக்கு உபதேசிக்க வேண்டும் போலும். அவ்வக்கால அறத்தினை நமது கவி மரபைச் சேர்ந்த கம்பனும் வள்ளுவனும் இளங்கோவும் திருத்தக்க தேவனும் பாரதியும் பாரதிதாசனும் தம் நிலையில்