பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

4

செவ்வரிபால் சுடும் விழியால்
அறையை வலம் வந்தேன்
என் கண்டேன் என்னல்லால் யான்?
தான்புரட்டுந் தொறும் பெரும்
கிளர்ச்சி பின்னும் புதிதாய்
மணந்தாழ் புரிகுழலாளல்குல்
போல வளர்கின்றதே
என் செய்ய?

இன்னும் தாரை ஓடிக்கொண்டேயிருக்கிறது. அதையெல்லாம் நம்மால் சகித்துக்கொண்டிருக்க முடியாது. எனவே அதன் முடிவுக்கு வருவோம். காலையில் கண்ட காட்சிகளெல்லாம் ஓருருவாய்ப் பெண் பேயாகித் தோன்றிக் கவிஞனை விரட்டுகிறதாம்:

எரிக்கும் வெயிலதனில்
துடிக்கும் என்பிலதாய்
தவிதவித்து மயங்கியபோது
உலகத்துப் பெண்னெல்லாம்
அணங்காகி வெறியூட்ட
விழித்துயிர்த்து மயங்கியோர் கணம்
கழித்து விழித்து உயிர்த்து
நரகம்
பெரு நரகம்

நரகத்திலே நெளிகிற காமப் புழுவாகப் பெண்ணைக் காண்பவன், அவள் அழகில் ஈடுபட்டு அதனைத் தனது தாரையின் ஊற்றாகக் கொள்ளுகிறான் என்பதை இம்மேற்கோள்கள் விளக்கும். பெண்ணைப் பற்றிக் கம்பன் எழுதினான்; பாரதி எழுதினான், வள்ளுவனும் எழுதினான். ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்றும், ‘பெண்ணைப் பெருமை செய்’ என்றும் கவிஞர்கள் முழங்கிய தமிழ் நாட்டில் அவள் காமத்தாரையின் ஊற்றாகக் காட்டப்படுகிறாள். இதுதான் கணத்தாரை. பார்ப்பதில் எல்லாம் காமம் ஒளிந்துகொண்டு, மனிதனை மன உளைச்சல்களுக்கு உட்படுத்துகிறது என்ற ஃபிராய்டின் தத்துவத்திற்கு இதுவொரு விளக்கவுரை.

கிராசை

வாழ்க்கையில் நிராசை இவர்களுடைய கவிதையின் சிறப்பான தன்மைகளுள் ஒன்று. இரண்டு பக்கமும் செல்ல

7/4